சென்னை - மும்பை: ஐபிஎல்-லின் இந்தியா - பாகிஸ்தான் போட்டி இது!
வான்கடே மைதானம் பேட்டிங்குகு உகந்தது. ரெய்னாவும் ஸ்மித்தும் இங்கு அதிக ரன்களை எடுத்துள்ளார்கள்.


ஐபிஎல்-லில் இந்தியா - பாகிஸ்தானுக்கு நிகராக பார்க்கப்படும் அணிகள் சென்னையும் மும்பையும். எப்போது மோதினாலும் கடும் போட்டி மனப்பான்மையுடன் ஆடுவார்கள். வித்தியாசமான வியூகங்களில் அசத்துவார்கள். இந்த இரண்டு அணிகளும் மோதும்போது எந்த அணி ஜெயிக்கும் என்று சொல்லவேமுடியாது.
இதுவரை இரு அணிகளும் ஐபிஎல்-லில் 22 முறை மோதியுள்ளார்கள். இரு அணிகளும் 11 போட்டிகளில் வென்றுள்ளன. சென்னை வேறு எந்த அணிகளுடனும் இந்தளவுக்குத் தோற்றதில்லை.
மும்பை அணி ப்ளேஆஃப்புக்குத் தகுதி பெறும் என யாருமே நினைத்திருக்கமுடியாது. முதல் 4 போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வி. பாதி ஐபிஎல்-லின் போது 7 போட்டிகளில் 2-ல் மட்டுமே வெற்றி பெற்றிருந்தார்கள். ஆனால் கடைசியில் புள்ளிகள் பட்டியலில் 2-ம் இடம் பிடித்து அசத்தியுள்ளார்கள்.
இருந்தாலும் லீக் அல்லாத போட்டிகளில் (ப்ளேஆஃப் மற்றும் இறுதிப் போட்டி), சென்னை அணி 4-1 என்கிற கணக்கில் மும்பையை விடவும் முன்னணியில் உள்ளது.
சொந்த மண்ணில் மும்பை விளையாடுவதால் அவர்களுக்குச் சாதகமாக இருக்கும் என்று சொல்லமுடியாது. இந்த ஐபிஎல்-லில் மும்பையில் ஆடிய 7 போட்டிகளில் 4-ல் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறார்கள். வான்கடே மைதானத்தில் மும்பைக்கு எதிரான போட்டியில் சென்னை பேட்ஸ்மேன்கள் அபாரமாக ஆடி வெற்றியைத் தேடிக் கொடுத்தார்கள். (அதேபோல இரு அணிகளும் சென்னையில் மோதிய போட்டியில் மும்பை வென்றது)
வான்கடே மைதானம் பேட்டிங்குகு உகந்தது. ரெய்னாவும் ஸ்மித்தும் இங்கு அதிக ரன்களை எடுத்துள்ளார்கள். இதனால் சென்னை அணியின் பேட்டிங் பிரச்னை இந்தப் போட்டியில் வெளிப்படாது என்று சொல்லலாம். மும்பையும் திடீரென சூப்பர் ஃபார்மில் உள்ளது.
நிச்சயம் இது பரபரப்பான போட்டியாகவே இருக்கப்போகிறது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...