என் மீதான விமரிசனங்களைப் படிக்க நேரமில்லை : யுவ்ராஜ் சிங்
என்னுடைய வேலை கிரிக்கெட் ஆடுவது மட்டுமே. விமரிசகர்களின் வேலை எழுதுவது. என்னைப் பற்றி எழுதுவதை நான் படிக்கமாட்டேன்.


44 பந்துகளில் 57 ரன்கள். யுவ்ராஜ் சிங் ஒருவழியாக ஃபார்முக்கு வந்திருக்கிறார். 16 கோடிக்கு ஏலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 33 வயது யுவ்ராஜ் இந்த ஐபிஎல்-லில் மோசமாக ஆடிவருகிறார். 10 மேட்சுகளில் 203 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். ஸ்டிரைக் ரேட் 123.03.
யுவ்ராஜ் சிங் சரியாக ஆடாததால் 16 கோடியை டெல்லி அணி வீணடித்துவிட்டது என கடுமையான விமரிசனங்கள் அவர் மீது எழுந்தன. பதிலுக்கு யுவ்ராஜும் "எனக்கு இவ்வளவு தொகை கொடுங்கள் என்று நான் யாரிடமும் கேட்கவில்லை. என்ன தொகைக்கு ஏலம் எடுத்திருந்தாலும் நான் ஐபிஎல் கிரிக்கெட்டில் ஆடியிருப்பேன்." என்று பதிலளித்தார்.
நேற்று, மும்பைக்கு எதிராக மிக நன்றாக ஆடினார் யுவ்ராஜ். அவருடைய பழைய அதிரடி ஆட்டத்தை மீண்டும் பார்க்கமுடிந்தது. ஆனால், யுவ்ராஜின் பங்களிப்பை டெல்லி பவுலர்கள் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவில்லை. 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது மும்பை.
"மும்பை அணியை 40/4 என்கிற நிலைமைக்குக் கொண்டுவந்தோம். அதிலிருந்து நாங்கள் ஜெயித்திருக்கவேண்டும். ஆனால் சரியான நேரத்தில் விக்கெட்டுகளை எடுக்காமல் போய்விட்டோம்" என்கிறார் யுவ்ராஜ்.
டெல்லி அணி, ப்ளேஆஃப்புக்குத் தகுதி பெறுமா என்கிற கேள்விக்கு, "எங்களுக்கு இன்னமும் 4 போட்டிகள் உள்ளன. தகுதி பெறுவது கடினம்தான். ஆனால் சாத்தியம் இல்லை என்று கூறமுடியாது. சென்ற வருடம் கொல்கத்தா அணி 6-7 போட்டிகளைத் தொடர்ந்து வென்று ப்ளேஆஃப்புக்குத் தகுதி பெற்றது. போட்டியையும் வென்றது. எனவே கிரிக்கெட்டில் எதுவும் சாத்தியம்" என்றார்.
அரை சதத்தின் மூலம் தன் மீதான விமரிசனங்களுக்குப் பதிலளித்துவிட்டாரா?
"என்னுடைய வேலை கிரிக்கெட் ஆடுவது மட்டுமே. விமரிசகர்களின் வேலை எழுதுவது. என்னைப் பற்றி எழுதுவதை நான் படிக்கமாட்டேன். அந்தளவுக்கு இப்போது என் வாழ்க்கையில் நேரம் கிடையாது. நான் என் வேலையைச் செய்ய முயற்சி செய்கிறேன். நீங்கள் உங்கள் வேலையைச் செய்யுங்கள்" என்கிறார் யுவ்ராஜ்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...