தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

குவாலிஃபையர் 2: டாஸ் சுண்டியதில் சர்ச்சை; ராஜஸ்தான் ராயல்ஸ் பேட்டிங்!

ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான குவாலிஃபையர் 2 ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.

News image

ஐபிஎல் கோப்பையுடன் குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் ஷுப்மன் கில், ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் ரியான் பராக் - படம் | ஐபிஎல் (எக்ஸ்)

Updated On :29 மே 2026, 7:29 pm IST

ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான குவாலிஃபையர் 2 ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல் தொடரில் நியூ சண்டீகரில் இன்று (மே 29) நடைபெறும் குவாலிஃபையர் 2 ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடுகின்றன.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரியான் பராக் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பிளேயிங் லெவனில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. குஜராத் டைட்டன்ஸ் அணியின் பிளேயிங் லெவனில் சாய் கிஷோர் சேர்க்கப்பட்டுள்ளார்.

சர்ச்சையான டாஸ்!

குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஷுப்மன் கில், டாஸை சுண்ட ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரியான் பராக் ஹெட்ஸ் எனக் கேட்டார். ஆனால், டாஸில் ஹெட்ஸ் விழவில்லை. இந்த நிலையில், அவர் கேட்டது சரியாகக் கேட்கவில்லை என போட்டியின் நடுவர் மீண்டும் டாஸ் வீசக் கூறினார்.

இரண்டாவது முறை டாஸ் வீசப்பட்டபோது, ரியான் பராக் மீண்டும் ஹெட்ஸ் எனக் கேட்க, இம்முறை ஹெட்ஸ் விழுந்தது. அவரும் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இந்த நிகழ்வு சர்ச்சையை ஏற்படுத்தியது.

டாஸ் வீசப்பட்ட பிறகு பேசிய ஷுப்மன் கில் துரதிருஷ்டவசமாக போட்டியின் நடுவருக்கு ரியான் பராக் ஹெட்ஸ் எனக் கேட்டது கேட்கவில்லை என அதிருப்தியை வெளிப்படுத்தினார். மேலும், அவர் மிகவும் அதிருப்தியுடன் தலைமைப் பயிற்சியாளர் நெஹ்ராவுடன் பேசியதைப் பார்க்க முடிந்தது.

டாஸை வென்றிருந்தால் ஷுப்மன் கில்லும் பேட்டிங் செய்வதையே தேர்தெடுக்க நினைத்திருந்ததாகக் கூறியது குறிப்பிடத்தக்கது.

Summary

In the Qualifier 2 match of the IPL series against the Gujarat Titans, the Rajasthan Royals won the toss and elected to bat.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.