திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ரச்சின், பிளண்டெல் சதம்: வலுவான நிலையில் நியூசிலாந்து!

அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட்டில் நியூசிலாந்து அணியின் பேட்டிங் குறித்து...

News image

ரச்சின், பிளண்டெல். - படங்கள்: எக்ஸ் / பிளாக்கேப்ஸ்.

Updated On :28 மே 2026, 2:43 pm IST

அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட்டில் நியூசிலாந்து அணி முதல் நாள் முடிவில் 361/5 ரன்கள் குவித்துள்ளது. இதில் ரச்சின், பிளண்டெல் சதம் விளாசி அசத்தினார்கள்.

அயர்லாந்துக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள நியூசிலாந்து ஒரேயொரு டெஸ்ட்டில் விளையாடுகிறது. டாஸ் வென்ற அயர்லாந்து பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இரு அணிகளும் முதல்முறையாக டெஸ்ட்டில் விளையாடுவது குறிப்பிடத்தக்கது.

வட அயர்லாந்தின் தலைநகரமான பெல்பெஸ்ட் திடலில் நடைபெறும் இந்தப் போட்டியின் முதல் நாள் முடிவில் நியூசிலாந்து அணி 94 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 361 ரன்கள் குவித்துள்ளது.

இந்தப் போட்டியில் தொடக்க வீரர் டாம் லாதம் டக் அவுட்டானார். கான்வே 4 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். கேன் வில்லியம்சனும் 36 ரன்களிலும் மிட்செல் 1 ரன்னிலும் ஆட்டமிழந்தார்கள்.

ஒரு கட்டத்தில் 86 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த நியூசிலாந்து அணியை ரச்சின் ரவீந்திராவும் டாம் பிளண்டெலும் சேர்ந்து காப்பாற்றினார்கள்.

ரச்சின் ரவீந்திரா 121 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மறுபுறம் டாம் பிளண்டெல் 142 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் விளையாடி வருகிறார்.

அயர்லாந்து சார்பில் வேகப் பந்துவீச்சாளர் மார்க் அடைர் 3 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். லியாம் மெகார்த்தி, ஹாரி டெக்டர் தலா 1 விக்கெட்டும் எடுத்தார்கள்.

Summary

Day 1: Stumps - Rachin Ravindra and Tom Blundell century makes NZ strong

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.