திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சதத்தை தவறவிட்ட சூர்யவன்ஷி: ஹைதராபாதுக்கு 244 ரன்கள் இலக்கு!

எலிமினேட்டர் ஆட்டத்தில் பேட்டிங்கில் அசத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் குறித்து...

News image

ஆட்டமிழந்து வெளியேறிய சூர்யவன்ஷி. - படம்: ஐபிஎல்

Updated On :27 மே 2026, 9:30 pm IST

எலிமினேட்டர் போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் பந்துவீச, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 243 ரன்கள் குவித்துள்ளது.

இந்தப் போட்டியில் ஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரர் வைபவ் சூர்யவன்ஷி 29 பந்துகளில் 97 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதிவேக சதம் சாதனையை இழந்தாலும் பல்வேறு சாதனைகளை முறியடித்துள்ளார்.

ஒரு பக்கம் ஜெய்ஸ்வால் பொறுமையாக ஆட மறுபக்கம் சூர்யவன்ஷி ருத்ரதாண்டவம் ஆடினார். ஜெய்ஸ்வால் 29 ரன்களில் ஆட்டமிழக்க, துருவ் ஜுரெல் அரைசதம் அடித்து அசத்தினார்.

சூர்யவன்ஷி ஆட்டமிழக்கும்போது 8 ஓவர்களில் 125 ரன்கள் இருந்தது. பின்னர், துருவ் ஜுரெல் ஆட்டமிழந்ததும் ஆட்டம் ரன் ரேட் குறையத் தொடங்கியது. ஒரு கட்டத்தில் 280 ரன்கள் அடிக்கும் வாய்ப்பிருந்தது.

சன்ரைசரஸ் அணியினர் பந்துவீச்சில் கடைசி கட்டத்தில் ரன்களைக் கட்டுப்படுத்தினார்கள். குறிப்பாக 17-ஆவது ஓவரில் 6 ரன்களும் 19-ஆவது ஓவரில் 5 ரன்கள், 20-ஆவது ஓவரில் 5 ரன்கள் மட்டுமே கொடுத்து அசத்தினார்கள்.

சன்ரைசரஸ் அணி சார்பில் பிரஃபுல் ஹிங்கே 3 விக்கெட்டுகள் எடுத்தார். சிறப்பாக பந்துவீசிய நிதீஷ்குமார் ரெட்டி 2 ஓவர்களில் 12 ரன்கள் மட்டுமே வழங்கினார்.

Summary

Vaibhav Sooryavanshi Misses Century: Target of 244 Runs for Hyderabad!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.