குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் பகிர்ந்த இன்ஸ்டாகிராம் பதிவு இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
நேற்றிரவு (மே.21) நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்களில் 229/4 ரன்கள் குவிக்க, அடுத்து விளையாடிய சிஎஸ்கே அணி 13.4 ஓவர்களில் 140 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்தப் போட்டியில் ஷிவம் துபே விக்கெட்டை தனது ஃபீல்டிங் மூலமாக வீழ்த்திய ஷுப்மன் கில் திடலில் அமர்ந்திருந்த சிஎஸ்கே ரசிகர்களைப் பார்த்து வாயின் மீது விரல் வைத்து “அமைதியாக இருக்கவும்” என்பது போல சைகை காண்பிப்பார்.
இதேபோல வெற்றிக்குப் பிறகு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிராஜ், பட்லர் உடன் அமர்ந்து வாயின்மீது விரல் வைத்து பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், “நன்றி 2. மஞ்சள் விளக்குகள். நீலம் முடிந்தது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
சிஎஸ்கே அணியை வீழ்த்தியதைக் குறிப்பிட்டு ஷுப்மன் கில் பகிர்ந்திருக்கும் இந்தப் புகைப்படம் சிஎஸ்கே ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
Summary
Shubman Gill's Instagram post is vital after Knocking out CSK
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அடுத்தடுத்த ஓவர்களில் ஷுப்மன் கில், சாய் சுதர்சன் அவுட்; தடுமாறும் குஜராத் டைட்டன்ஸ்!

புவனேஷ்வர் குமாருக்கு எதிராக சொதப்பியிருக்கும் ஷுப்மன் கில்..! அதிர்ச்சியான புள்ளி விவரங்கள்!

பார்ட்னர்ஷிப்பில் வரலாறு படைத்த ஷுப்மன் கில் - சாய் சுதர்சன்!







