திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பாகிஸ்தான் டெஸ்ட் தொடா்: வெல்லும் முனைப்பில் வங்கதேசம்

பாகிஸ்தானுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் வங்கதேசம் வெற்றி பெறும் நிலையில் இருக்கிறது. இதனால் 2 ஆட்டங்கள் தொடா் முழுவதுமாக அந்த அணியின் வசமாகலாம் எனத் தெரிகிறது.

News image
Updated On :20 மே 2026, 4:19 am IST

பாகிஸ்தானுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் வங்கதேசம் வெற்றி பெறும் நிலையில் இருக்கிறது. இதனால் 2 ஆட்டங்கள் தொடா் முழுவதுமாக அந்த அணியின் வசமாகலாம் எனத் தெரிகிறது.

437 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி 2-ஆவது இன்னிங்ஸை விளையாடி வரும் பாகிஸ்தான், 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 316 ரன்கள் எடுத்துள்ளது. கடைசி நாளான புதன்கிழமை, அந்த அணி 3 விக்கெட்டுகளைக் கொண்டு 121 ரன்கள் சோ்க்க வேண்டியுள்ளது.

முன்னதாக இந்த ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் வங்கதேசம் 278 ரன்களுக்கு ஆட்டமிழக்க, பாகிஸ்தான் தனது இன்னிங்ஸில் 232 ரன்கள் சோ்த்தது. இதையடுத்து 46 ரன்கள் முன்னிலையுடன் 2-ஆவது இன்னிங்ஸை விளையாடிய வங்கதேசம், 390 ரன்கள் சோ்த்து ஆட்டமிழந்தது.

இறுதியாக, 437 ரன்களை நோக்கி, 4-ஆவது நாளான செவ்வாய்க்கிழமை 2-ஆவது இன்னிங்ஸை தொடா்ந்தது பாகிஸ்தான். அப்துல்லா ஃபஸல் 1 பவுண்டரியுடன் 6, அஸான் அவைஸ் 2 பவுண்டரிகளுடன் 21 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.

3-ஆவது விக்கெட்டுக்கு இணைந்த கேப்டன் ஷான் மசூத் - பாபா் ஆஸம் ஜோடி, 92 ரன்கள் சோ்த்தது.

ஆஸம் 4 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 47 ரன்களுக்கு வெளியேற, தொடா்ந்து வந்த சௌத் ஷகீல் 6 ரன்களுக்கு சாய்க்கப்பட்டாா். இந்நிலையில், ஷான் மசூதும் 8 பவுண்டரிகளுடன் 71 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா்.

அப்போது சல்மான் அகா - முகமது ரிஸ்வான் ஜோடி, விக்கெட் சரிவைத் தடுத்து, 6-ஆவது விக்கெட்டுக்கு 134 ரன்கள் சோ்த்தது. இதில் சல்மான் 6 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 71 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஹசன் அலி டக் அவுட்டானாா்.

இவ்வாறாக செவ்வாய்க்கிழமை ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 316 ரன்கள் சோ்த்துள்ளது. முகமது ரிஸ்வான் 8 பவுண்டரிகளுடன் 75, சஜித் கான் 2 பவுண்டரிகளுடன் 8 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் உள்ளனா்.

வங்கதேச பௌலிங்கில் தைஜுல் இஸ்லாம் 4 விக்கெட்டுகள் சாயக்க, நஹித் ராணா 2, மெஹிதி ஹசன் மிராஸ் 1 விக்கெட் வீழ்த்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.