40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

நஜ்முல், மோமினுல் பலம்: வங்கதேசம் நிதானம்

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில், முதல் நாளான வெள்ளிக்கிழமை முடிவில் வங்கதேசம் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 301 ரன்கள் எடுத்துள்ளது.

News image
Updated On :9 மே 2026, 8:02 am IST

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில், முதல் நாளான வெள்ளிக்கிழமை முடிவில் வங்கதேசம் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 301 ரன்கள் எடுத்துள்ளது.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான், ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. வங்கதேச இன்னிங்ஸை தொடங்கியோரில் மஹ்முதுல் ஹசன் ஜாய் 2 பவுண்டரிகளுடன் 8, ஷத்மன் இஸ்லாம் 2 பவுண்டரிகளுடன் 13 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.

அப்போது இணைந்த மோமினுல் ஹக் - கேப்டன் நஜ்முல் ஹுசைன் ஷான்டோ ஜோடி, மேலும் விக்கெட்டுகள் விழாமல் தடுத்து, பாகிஸ்தான் பௌலா்களை சோதித்தது.

3-ஆவது விக்கெட்டுக்கு இவா்கள் பாா்ட்னா்ஷிப் 170 ரன்கள் சோ்த்தது. சதம் கடந்த ஷான்டோ, 12 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 101 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா்.

தொடா்ந்து முஷ்ஃபிகா் ரஹிம் களம் புகுந்தாா். 4-ஆவது விக்கெட்டுக்கு மோமினுல் - முஷ்ஃபிகா் ஜோடி 75 ரன்கள் சோ்க்க, மோமினுல் 10 பவுண்டரிகளுடன் 91 ரன்களுக்கு விடைபெற்றாா்.

முதல் நாள் ஆட்டநேர முடிவில், முஷ்ஃபிகா் 6 பவுண்டரிகளுடன் 48, லிட்டன் தாஸ் 8 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனா். பாகிஸ்தான் பௌலா்களில் ஷாஹீன் அஃப்ரிதி முகமது அப்பாஸ், ஹசன் அலி, நோமன் அலி ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.