17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ராஜஸ்தான் ராயல்ஸால் எந்த ஒரு அணியையும் வீழ்த்த முடியும்: விக்ரம் ரத்தோர்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் எந்த ஒரு அணியையும் வீழ்த்த முடியும் என அந்த அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் தெரிவித்துள்ளார்.

News image

துருவ் ஜுரெல், வைபவ் சூர்யவன்ஷி - படம் | ராஜஸ்தான் ராயல்ஸ் (எக்ஸ்)

Updated On :18 மே 2026, 5:24 pm IST

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் எந்த ஒரு அணியையும் வீழ்த்த முடியும் என அந்த அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் தில்லி அருண் ஜெட்லி திடலில் நேற்று (மே 17) நடைபெற்ற ஆட்டத்தில் தில்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் தில்லி கேபிடல்ஸ் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தியது.

இந்த நிலையில், முழுத் திறனையும் வெளிப்படுத்தினால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் எந்தவொரு அணியையும் வீழ்த்த முடியும் என அந்த அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற வேண்டும் என்றே திட்டமிடுகிறோம். கடைசி இரண்டு போட்டியில் வெற்றி பெற்றுக் கொள்ளலாம் என நாங்கள் காத்திருக்கவில்லை. ஒவ்வொரு ஆட்டமும் எங்களுக்கு மிகவும் முக்கியம். ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற முயற்சி செய்கிறோம். கடைசி இரண்டு போட்டிகளிலும் நாங்கள் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நிலை உருவாகியுள்ளது.

எங்களது முழுத் திறனையும் வெளிப்படுத்தினால், எந்த ஒரு அணியையும் வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் நாங்கள் விளையாடுகிறோம். எங்களது சிந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி கடைசி இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்றார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அதன் கடைசி இரண்டு லீக் போட்டிகளில் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் (மே 19) மற்றும் மும்பை இந்தியன்ஸ் (மே 24) அணிகளை எதிர்த்து விளையாடுவது குறிப்பிடத்தக்கது.

Summary

Rajasthan Royals batting coach Vikram Rathour has stated that the team is capable of defeating any opponent.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.