ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாதுக்கு எதிரானப் போட்டியில் முதலில் விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் 5 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்கள் எடுத்துள்ளது.
ஐபிஎல் தொடரில் அகமதாபாதில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, குஜராத் டைட்டன்ஸ் முதலில் விளையாடியது.
சாய் சுதர்சன், வாஷிங்டன் சுந்தர் அரைசதம்; சன்ரைசர்ஸுக்கு 169 ரன்கள் இலக்கு!
முதலில் விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்கள் எடுத்துள்ளது.
அந்த அணியில் சாய் சுதர்சன் மற்றும் வாஷிங்டன் சுந்தர் இருவரும் அரைசதம் விளாசி அசத்தினர். சாய் சுதர்சன் 44 பந்துகளில் 61 ரன்களும் (5 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள்), வாஷிங்டன் சுந்தர் 33 பந்துகளில் 50 ரன்களும் (7 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர்) எடுத்தனர். மற்ற வீரர்கள் யாரும் பெரிய அளவில் ரன்கள் குவிக்கவில்லை. நிஷாந்த் சிந்து 22 ரன்கள், ஜேசன் ஹோல்டர் 11 ரன்கள், ஜோஸ் பட்லர் 7 ரன்கள், ஷுப்மன் கில் 5 ரன்கள் எடுத்தனர்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் தரப்பில் பிரஃபுல் ஹிங்கே மற்றும் சாகிப் ஹுசைன் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினர். அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய கேப்டன் பாட் கம்மின்ஸ் 4 ஓவர்களில் வெறும் 20 ரன்களை விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினார்.
169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி களமிறங்குகிறது.
Summary
Batting first in their IPL match against Sunrisers Hyderabad, Gujarat Titans scored 168 runs for the loss of 5 wickets.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சொதப்பிய டாப் ஆர்டர், பந்துவீச்சில் அசத்திய ஆர்சிபி; 2-வது சாம்பியன் பட்டம் யாருக்கு?

அடுத்தடுத்த ஓவர்களில் ஷுப்மன் கில், சாய் சுதர்சன் அவுட்; தடுமாறும் குஜராத் டைட்டன்ஸ்!

பார்ட்னர்ஷிப்பில் வரலாறு படைத்த ஷுப்மன் கில் - சாய் சுதர்சன்!








