ஐபிஎல் போட்டியின் 54-ஆவது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இண்டியன்ஸை ஞாயிற்றுக்கிழமை "த்ரில்' வெற்றி கண்டது.
முதலில் மும்பை 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 166 ரன்கள் சேர்க்க, பெங்களூரு 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழந்து 167 ரன்கள் எடுத்தது. இந்த ஆட்டத்தில் பெüலிங்கில் புவனேஷ்வர் குமாரும், பேட்டிங்கில் கிருணால் பாண்டியாவும் பெங்களூரு வெற்றிக்கு பெரும்பங்காற்றினர்.
முன்னதாக டாஸ் வென்ற பெங்களூரு, பந்துவீசத் தயாரானது. மும்பை இன்னிங்ஸில் ரயான் ரிக்கெல்டன் 2, ரோஹித் சர்மா 2 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் உள்பட 22 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.
சூர்யகுமார் யாதவ் டக் அவுட்டாக, நமன் திர் - திலக் வர்மா ஜோடி, 4-ஆவது விக்கெட்டுக்கு 82 ரன்கள் சேர்த்து மும்பையை மீட்டது. நமன் திர் 5 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் உள்பட 47, வில் ஜாக்ஸ் 1 பவுண்டரியுடன் 10 ரன்களுக்கு விடைபெற்றனர்.
திலக் வர்மா, 3 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் உள்பட 57 ரன்களுக்கு சாய்க்கப்பட்டார். ராஜ் பாவா 16 ரன்களுக்கு நிறைவு செய்ய, ஓவர்கள் முடிவில் கார்பின் பாஷ் 5, தீபக் சஹர் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
பெங்களூரு தரப்பில் புவனேஷ்வர் குமார் 4, ஜாஷ் ஹேஸில்வுட், ராசிக் சலாம், ரொமேரியோ ஷெப்பர்டு ஆகியோர் தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.
அடுத்து 167 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு விளையாடிய பெங்களூரு அணியில், விராட் கோலி 0, தேவ்தத் படிக்கல் 12, கேப்டன் ரஜத் பட்டிதார் 8 ரன்களுக்கு சாய்க்கப்பட, ஜேக்கப் பெத்தெல் 2 பவுண்டரிகளுடன் 27 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார்.
கிருணால் பாண்டியா அதிரடி ஆட்டத்துடன் அணியை மீட்டெடுக்க, ஜிதேஷ் சர்மா 18, டிம் டேவிட் 0 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டனர். பாண்டியா 46 பந்துகளில் 4 பவுண்டரிகள், 5 சிக்ஸர்களுடன் 73 ரன்களுக்கு வீழ, ரொமேரியோ ஷெப்பர்டு 4 ரன்களுக்கு நடையைக் கட்டினார்.
முடிவில் ராசிக் சலாம் 3, புவனேஷ்வர் குமார் 7 ரன்களுடன் கடைசி ஓவரில் அணியை "த்ரில்' வெற்றிக்கு வழிநடத்தி, ஆட்டமிழக்காமல் இருந்தனர். மும்பை பெüலர்களில் கார்பின் பாஷ் 4, தீபக் சஹர் 2, கஸôன்ஃபர், ராஜ் பாவா ஆகியோர் தலா 1 விக்கெட் சாய்த்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இந்தியாவுடனான மகளிர் டி20: தொடரை வென்றது இங்கிலாந்து

பிளே-ஆஃப் நம்பிக்கையில் நீடிக்கும் கொல்கத்தா

பஞ்சாபுக்கு தொடா்ந்து 5-ஆவது தோல்வி

கோலி அதிரடி சதம்: பெங்களூரு மீண்டும் முதலிடம்
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



