லக்னௌ அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகள் எடுத்து ஜேமி ஓவர்டன் ஆட்டத்தை மாற்றினார்.
சேப்பாக்கத்தில் நடைபெற்றுவரும் போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே பந்துவீச்சைத் தேர்வு செய்தது. பவர்பிளேவில் அதிரடியாக விளையாடிய ஜோஷ் இங்லீஷ் 17 பந்துகளில் அரைசதம் அடித்தார்.
பவர்பிளே முடிவில் லக்னௌ அணி 91/1 ரன்கள் எடுத்திருந்தது. பின்னர், 9.1ஆவது ஓவரில் ஜேமி ஓவர்டன் வீசிய பந்தில் 85 ரன்கள் எடுத்திருந்த இங்லீஷ் ஆட்டமிழந்தார்.
இதே ஓவரில் 9.4ஆவது ஓவரில் ஜேமி ஓவர்டன் வீசிய பந்தில் ரிஷப் பந்த் போல்ட் ஆனார். 10 ஓவர்களில் 117/4 ரன்கள் எடுத்துள்ளது. தற்போது, மார்க்ரம் - ரகுவன்ஷி விளையாடி வருகிறார்கள்.
இந்த சீசன் முழுவதும் சிஎஸ்கே அணிக்கு விக்கெட் தேவைப்படும்போதெல்லாம் ஓவர்டன் விக்கெட் வீழ்த்தியிருக்கிறார்.
சிஎஸ்கே ரசிகர்கள் அவரை சமூக வலைதளத்தில், “தேவதூதன்” எனக் கூறிவருகிறார்கள்.
Summary
Jamie Overton Changes the Game! Two Wickets in a Single Over!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










