ஐபிஎல் 2026 சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி ஒன்பாவது இடத்தில் இருக்கிறது. ஆர்சிபி தோல்வியுற்றாலும் கடைசி ஓவர் வரைக்கும் வந்ததால், மும்பை இந்தியன்ஸ் கடைசி இடத்துக்குக் கீழிறங்காமல் நூலிழையில் தப்பித்தது.
நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் ஆர்சிபிக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த லக்னௌ அணி 19 ஓவர்களில் (மழை காரணமாக குறைப்பு) 209/3 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய ஆர்சிபி 19 ஓவர்களில் 203/6 ரன்கள் எடுத்து தோல்வியுற்றது.
இந்தப் போட்டியில் கடைசி ஓவரில் ஆர்சிபிக்கு 20 ரன்கள் தேவையானபோது திக்வேஷ் ரதி சிறப்பாக பந்துவீசி 10 ரன்கள் மட்டுமே கொடுத்தார்.
இந்தப் போட்டியில் ஆர்சிபி 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது. ஒருவேளை 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றிருந்தால், மும்பை இந்தியன்ஸ் அணி 10ஆவது இடத்துக்குத் தள்ளப்பட்டிருக்கும்.
லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸ் வென்றாலும் தற்போதைக்கு புள்ளிப் பட்டியலில் 6 (-0.934) புள்ளிகளுடன் கடைசி இடத்திலேயே நீடிக்கிறது. 10 போட்டிகளில் தனது 3ஆவது வெற்றியை லக்னௌ அணி பெற்றுள்ளது.
ஐபிஎல் 2026: புள்ளிப் பட்டியல்
1. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - 14 புள்ளிகள்
2. பஞ்சாப் கிங்ஸ் - 13 புள்ளிகள்
3. ஆர்சிபி - 12 (1.23) புள்ளிகள்
4. ராஜஸ்தான் ராயல்ஸ் - 12 (0.51) புள்ளிகள்
5. குஜராத் டைட்டன்ஸ் - 12 (-0.15) புள்ளிகள்
6. சிஎஸ்கே - 10 (0.15) புள்ளிகள்
7. தில்லி கேபிடல்ஸ் - 8 புள்ளிகள்
8. கேகேஆர் - 7 புள்ளிகள்
9. மும்பை இந்தியன்ஸ் - 6 (-0.649) புள்ளிகள்
10. லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸ் - 6 (-0.93) புள்ளிகள்
Summary
Mumbai Indians narrowly escape dropping to the bottom spot! rcb save it
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









