ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான அட்டவணையை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.
ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த ஒருநாள் தொடர் வருகிற மே 30 ஆம் தேதி தொடங்குகிறது. ஜூன் 2 ஆம் தேதி இரண்டாவது ஒருநாள் போட்டியும், ஜூன் 4 ஆம் தேதி மூன்றாவது ஒருநாள் போட்டியும் நடைபெறவுள்ளது.
ஆஸ்திரேலிய வீரர்கள் பலரும் ஐபிஎல் தொடரில் விளையாடி வருவதால், பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாட முடியாத சூழல் அவர்களுக்கு உருவாக வாய்ப்பிருக்கிறது. ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் போட்டிகள் மே 26 ஆம் தேதி தொடங்கி மே 31 வரை நடைபெறுகிறது. ஐபிஎல் தொடரில் நன்றாக விளையாடி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் நிலையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் உள்ளன.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் கேப்டன் பாட் கம்மின்ஸ், டிராவிஸ் ஹெட், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் ஜோஷ் ஹேசில்வுட், பஞ்சாப் கிங்ஸ் அணியில் கூப்பர் கானலி, சேவியர் பார்ட்லெட் போன்ற ஆஸ்திரேலிய வீரர்கள் உள்ளனர். இந்த மூன்று அணிகளும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் நிலையில் உள்ளதால், அந்த அணியில் உள்ள ஆஸ்திரேலிய வீரர்கள் அனைவரும் பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடுவதற்கு வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது.
தில்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு இருப்பதால், அந்த அணியில் உள்ள மிட்செல் ஸ்டார்க் மற்றும் கேமரூன் கிரீனும் பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் விளையாடுவது சந்தேகம் எனக் கூறப்படுகிறது.
லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி கிட்டத்தட்ட பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை இழந்துவிட்டதால், அந்த அணியில் உள்ள ஆஸ்திரேலிய வீரர்களான மிட்செல் மார்ஷ் மற்றும் ஜோஷ் இங்லிஷ் இருவரும் பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடுவார்கள் எனக் கூறப்படுகிறது.
Summary
The Pakistan Cricket Board has released the schedule for the three-match ODI series against Australia.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆஸ்திரேலியாவை வீழ்த்தி ஒருநாள் தொடரை வென்றது பாகிஸ்தான்!

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி, ஒருநாள் தொடருக்கான ஆப்கன் அணி அறிவிப்பு!

பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து மிட்செல் மார்ஷ் விலகல்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு!
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK




