/

டி20 தரவரிசை: முதலிடத்தில் நீடிக்கும் இந்தியா

சா்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) டி20 தரவரிசைப் பட்டியலில், 3 முறை உலக சாம்பியனான இந்தியா முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது.

News image
Updated On :6 மே 2026, 3:03 am IST

சா்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) டி20 தரவரிசைப் பட்டியலில், 3 முறை உலக சாம்பியனான இந்தியா முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது.

கடந்த மாா்ச் மாதம் டி20 உலக சாம்பியனான இந்தியா, போட்டியின் வரலாற்றில் கோப்பையைத் தக்கவைத்த முதல் அணி, 3 முறை சாம்பியனான ஒரே அணி ஆகிய சாதனைகளைப் படைத்தது.

ஐசிசி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட திருத்தப்பட்ட தரவரிசையின்படி, முதல் 7 இடங்களில் மாற்றம் ஏற்படவில்லை. இந்தியா 275 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்க, இங்கிலாந்து (262), ஆஸ்திரேலியா (258) அணிகள் முறையே அடுத்த இரு இடங்களில் உள்ளன.

நியூஸிலாந்து (247), தென்னாப்பிரிக்கா (244), பாகிஸ்தான் (240), மேற்கிந்தியத் தீவுகள் (233) ஆகியவை 4 முதல் 7-ஆம் இடங்களை வகிக்கின்றன. வங்கதேசம் (225) எட்டாம் இடத்துக்கு முன்னேற, இலங்கை (221) ஒன்பதாம் இடத்துக்கு சறுக்கியுள்ளது. ஆப்கானிஸ்தான் (220) டாப் 10 எண்ணிக்கையை நிறைவு செய்கிறது.

பட்டியலில் இருக்கும் அணிகள், 2025 மே முதல் விளையாடிய ஆட்டங்களை 100 சதவீதமும், அதற்கு முந்தைய இரு ஆண்டுகளில் களம் கண்ட ஆட்டங்களை 50 சதவீதமும் மதிப்பீடு செய்து தரவரிசை நிா்ணயிக்கப்பட்டதாக ஐசிசி தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.