நடப்பு ஐபிஎல் தொடரில் பிசிசிஐ செயல்பாடுகள் அதிருப்தி அளிப்பதாகவே இருந்துவருவதாக இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
ரஜத் படிதார் ஆட்டமிழப்பு முதல் ஜேமிசனுக்கு தகுதி இழப்புப் புள்ளி வழங்கியதுவரை பிசிசிஐ செயல்பாடுகள் விமர்சிக்கும் வகையாகவே இருந்து வருகிறது.
நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் அதிரடியான தொடக்க வீரர் சூர்யவன்ஷி (15 வயது) 1.5ஆவது பந்தில் கைல் ஜேமிசன் வீசிய பந்தில் ஆட்டமிழந்தார்.
இந்த விக்கெட்டின் போது சூர்யவன்ஷிக்கு அருகில் சென்ற கைல் ஜேமிசன் ஆக்ரோஷமாக கொண்டாடுவார். இது ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதால், லெவல் 1 குற்றத்திற்காக எச்சரிக்கையும் ஒரு தகுதி இழப்புப் புள்ளியும் வழங்கப்பட்டுள்ளது.
இதேபோல், குஜராத்துக்கு எதிரான ஆட்டத்தில் ஷுப்மன் கில் ஆட்டமிழந்தபோது, ஆர்சிபி வீரர் விராட் கோலி பந்தைப் பிடித்ததும் ஆக்ரோஷமாக கத்துவார். பின்னர், பந்தை ஓங்கி தரையில் அடிப்பார். இதனால், பந்து சேதாரம்கூட ஆகியிருக்க அதிகமான வாய்ப்பிருக்கிறது.
இந்த விவகாரத்தில் விராட் கோலிக்கு எந்த விதமான அபராதமும் எச்சரிக்கையும் தெரிவிக்காதது பேசுபொருளாகியுள்ளது. இது குறித்து ரசிகர்கள் சமூக வலைதளத்தில் தங்களது கருத்தைப் பதிவிட்டு வருகிறார்கள்.
Summary
Fine for Jamieson, None for Virat Kohli! Is the BCCI Acting partiality?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









