இன்று இறுதியாகும் அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தம்இன்று டெல்டாவில் பலத்த மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமூக விரோதிகளுக்கு எதிரான நடவடிக்கை: 14 நாள்களில் 4,469 போ் கைதுஇந்தியா - நேபாளம் இடையே ரயில் போக்குவரத்து: இரு நாடுகளின் அதிகாரிகள் ஆலோசனைகேரளத்தில் நிபா வைரஸால் ஒருவா் பாதிப்பு: தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
/

கேன் வில்லியம்சன் ஓய்வு; வைரலாகும் விராட் கோலியின் பதிவு!

நியூசிலாந்து அணியின் கேன் வில்லியம்சன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றது குறித்து விராட் கோலி வெளியிட்டுள்ள பதிவு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.

News image

கேன் வில்லியம்சன்

Updated On :12 ஜூன் 2026, 9:12 pm IST

நியூசிலாந்து அணியின் கேன் வில்லியம்சன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றது குறித்து விராட் கோலி வெளியிட்டுள்ள பதிவு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.

நியூசிலாந்து அணியின் மூத்த வீரர்களில் ஒருவரான கேன் வில்லியம்சன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக இன்று (ஜூன் 12) அறிவித்தார். இதன் மூலம், தனது 16 ஆண்டு கால கிரிக்கெட் பயணத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்ளார் கேன் வில்லியம்சன்.

இந்த நிலையில், நியூசிலாந்து அணியின் கேன் வில்லியம்சன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றது குறித்து விராட் கோலி வெளியிட்டுள்ள பதிவு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து கேன் வில்லியம்சன் ஓய்வு பெற்றது தொடர்பாக விராட் கோலி அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: எதிரணியாக இருந்தது முதல் நண்பர்கள் என பல ஆண்டுகளாக நாம் ஒன்றாக பயணம் செய்துள்ளோம். நீங்கள் பேட் செய்வதை பார்ப்பதற்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கும் கேன் வில்லியம்சன். உங்களுக்கு எதிராக பல ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடியுள்ளேன். ஆனால், கிரிக்கெட்டைத் தாண்டி உங்களது நட்புக்கு நான் மிகுந்த மதிப்பளிக்கிறேன். நாம் பேசிக் கொண்ட ஒவ்வொரு சந்திப்பையும் நினைத்து மகிழ்ச்சியடைகிறேன். உங்களுக்கு எல்லாம் சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன் எனப் பதிவிட்டுள்ளார்.

35 வயதாகும் கேன் வில்லியம்சன் அனைத்து வடிவிலான போட்டிகளையும் சேர்த்து நியூசிலாந்து அணிக்காக 19,346 ரன்கள் எடுத்துள்ளார் அதில் 48 சதங்கள் மற்றும் 6 இரட்டைச் சதங்கள் அடங்கும்.

விராட் கோலி மற்றும் கேன் வில்லியம்சன் இருவரும் கடந்த 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பைத் தொடரிலிருந்து நண்பர்களாக பழகி வருவது குறிப்பிடத்தக்கது.

Summary

The post shared by Virat Kohli regarding New Zealand's Kane Williamson retiring from international cricket has garnered attention among cricket fans.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.