கேகேஆர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சாளர் ஷர்துல் தாக்குர் ஆட்ட நாயகன் விருது வென்றார். இது அவருக்கு மும்பை இந்தியன்ஸ் அணியில் முதல் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, சிஎஸ்கே அணிக்கு 57 போட்டிகளில் விளையாடிய ஷர்துல் தாக்குர் ஒரேயொரு போட்டியிலும் ஆட்ட நாயகன் விருது வென்றதில்லை என்பதும் ஆச்சரிமளிக்கும் விதமாகப் பார்க்கப்படுகிறது.
டாஸ் வென்ற மும்பை பந்துவீச, கொல்கத்தா 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 220 ரன்கள் எடுக்க, மும்பை 19.1 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 224 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் ஷர்துல் தாக்குர் 3 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். இந்தக் காரணத்தினால் அவருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
முன்னதாக, ஒரு இறுதிப் போட்டியில் கடைசி பந்தில் 2 ரன்கள் தேவையாக இருக்கும்போது சிஎஸ்கே அணிக்காக விளையாடிய ஷர்துல் தாக்குர் மலிங்கா ஓவரில் ஆட்டமிழப்பார்.
இந்தப் போட்டியையும் 57 போட்டிகளில் ஆட்ட நாயகன் விருதில்லாததை 57-0, மும்பையில் முதல் போட்டியிலேயே ஆட்ட நாயகன் வென்றதை 1-1 என்பதையும் ஒப்பிட்டு ’மும்பை இந்தியன்ஸ் அணியின் துரந்தர் - ஷர்துல் தாக்குர்’ என மும்பை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் ஜாலியாக விமர்சித்து வருகிறார்கள்.
துரந்தர் படத்தில் இந்தியாவின் ஒற்றனாக பாகிஸ்தானுக்குச் செல்லும் ரன்வீர் சிங் - ஹம்சா கதாபாத்திரத்திலும் ராகேஷ் பேடி - ஜமீல் கதபாத்திரத்திலும் சிறப்பாக நடித்திருப்பார்கள். இந்தப் படத்தின் இரண்டு பாகமும் இந்தியாவில் மட்டுமே ரூ.1,000 கோடி வசூலித்துள்ளது.
Summary
57 matches played, 0 Player of the Match in csk, Shardul Thakur criticized by own mumbai indians fans
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காதலிக்க நேரமில்லை: மிருணாள் தாக்குர்
நடிகருடன் திருமணம்... தயாரிப்பாளர் பேச்சால் வெட்கப்பட்ட மிருணாள்!
சம்பளமல்ல, நல்ல கதாபாத்திரங்களுக்காகவே காத்திருக்கிறேன்: மிருணாள் தாக்குர்
’லார்ட் தாக்குர்’ மீம் அல்ல; அன்பு..! ஷர்துல் தாக்குர் பேட்டி!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



