மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

’லார்ட் தாக்குர்’ மீம் அல்ல; அன்பு..! ஷர்துல் தாக்குர் பேட்டி!

ஆட்ட நாயகன் விருது வென்ற ஷர்துல் தாக்குர் பேசியது குறித்து...

News image

விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் ஷர்துல் தாக்குர். - படம்; ஐபிஎல்

Updated On :30 மார்ச் 2026, 12:09 pm

மும்பை இந்தியன்ஸ் அணியில் அறிமுகமான தனது முதல் போட்டியிலேயே பந்து வீச்சாளர் ஷர்துல் தாக்குர் ஆட்ட நாயகன் விருது வென்று அசத்தினார்.

ரசிகர்கள் இவரை ‘லார்டு தாக்குர்’ என அழைப்பது அன்பின் நிமித்தமாக என போட்டிக்குப் பிறகான நேர்காணலில் ஷர்துல் தாக்குர் நெகிழ்ச்சியாகப் பேசினார்.

மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த ஷர்துல் தாக்குர் (34 வயது) இதுவரை 7 ஐபிஎல் அணிகளில் விளையாடியுள்ளார். தனது சொந்த ஊரான மும்பைக்கு முதல்முறையாக ஐபிஎல் போட்டியில் விளையாடுகிறார்.

தனது முதல் போட்டியிலேயே ஷர்துல் தாக்குர் சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்டுகள் எடுத்தார். ஆட்டநாயகன் விருதும் வென்றார். ரசிகர்கள் இவரை ’லார்டு தாக்குர்’ என்று கிரிக்கெட் ரசிகர்கள் அழைப்பார்கள்.

இதுவரை 106 ஐபிஎல் போட்டிகளில் 110 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். 7ஆவது முறையாக ஆட்ட நாயகன் விருது வென்றுள்ளார். மும்பைக்கு தனது முதல் ஆட்டத்திலேயே ஆட்ட நாயகன் விருது வென்ற ஷர்துல் தாக்குர் பேசியிருப்பதாவது:

இது மக்கள் அளித்த பெயர். அது மீம் மூலமாக வந்த பெயர் அல்ல; ஆனால், அது அன்பின் நிமித்தமாக வைத்த ஒரு நேர்மறையான விஷயம். நீங்கள் நன்றாக விளையாடும்போது மக்கள் உங்கள் மீது மக்கள் அன்பு காட்டுவார்கள்.

இந்தத் திடல் எனக்கு கசப்பான, இனிமையான அனுபவங்களைக் கொடுத்திருக்கிறது. மும்பைக்காக விளையாடுவது சிறப்பானது. 2010ல் நான் வலைப்பயிற்சி பந்துவீச்சாளராக இருந்துள்ளேன். கடைசியாக எனது சொந்த அணிக்காக விளையாடியுள்ளேன் என்றார்.

Summary

'Not A Meme, It's Love': Shardul Thakur Embraces 'Lord' Tag After Match-Winning MI Debut.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.