மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சம்பளமல்ல, நல்ல கதாபாத்திரங்களுக்காகவே காத்திருக்கிறேன்: மிருணாள் தாக்குர்

திரைப்படத் தேர்வுகள் குறித்து மிருணாள் தாக்குர்....

News image

மிருணாள் தாக்குர் - insta

Updated On :6 ஏப்ரல் 2026, 8:19 am

நடிகை மிருணாள் தாக்குர் தன் திரைப்படத் தேர்வுகள் குறித்து மனம் திறந்துள்ளார்.

நடிகை மிருணாள் தாக்குர் பிரபலமான நடிகையென்பதால் எப்போதும் அவரைச் சுற்றி காதல் கிசுகிசுக்கள் இருந்துகொண்டே இருக்கின்றன.

அண்மை காலமாக, நடிகர் தனுஷும் மிருணாளும் காதலிப்பதாகவும் இருவரும் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டிருப்பதாகவும் வதந்திகள் பரவின. இதுகுறித்து, இருவருமே பதில் சொல்லாமல் இருந்தது ரசிகர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியது.

தற்போது, டக்காய்ட் என்கிற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம், விரைவில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில், நேர்காணலில் பேசிய மிருணாள் தாக்குர், “எனக்கு நல்ல சம்பளம் கொடுக்க முன்வந்தாலும் நான் சில கதைகளை வேண்டாம் என்று நிராகரித்து விடுவேன். நல்ல கதாபாத்திரங்களையே முக்கியமென நினைக்கிறேன். சீதா ராமம் படத்தில் சீதா மகாலட்சுமி, ஹாய் நானாவில் யஷ்னா ஆகியவை என் திரைப்பயணத்தில் மைல்கல்கள். அப்படிப்பட்ட, கதாபாத்திரங்களில் நடிப்பதற்காகவே காத்திருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Summary

actor mrunal thakur said good characters are more valuable than huge salary

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.