தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த வேகப் பந்துவீச்சாளர் மார்கோ யான்சென் தாமதாக இந்தியாவுக்கு வர பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் அனுமதி அளித்துள்ளார்.
டி20 உலகக் கோப்பையில் விளையாடிவிட்டு, போர் காரணமாக விமானங்கள் தடைசெய்யப்பட்டதால் அவர்களது நாட்டுக்குச் செல்ல ஒரு வாரம் காலதாமதம் ஏற்பட்டதால், யான்செனுக்கு இந்தியாவுக்கு வர கூடுதல் காலம் அவகாசம் அளிப்பதாகக் கூறியுள்ளார்.
கடந்த ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணி இறுதிப் போட்டி வரை முன்னேறியது. இதில் மார்கோ யான்சென் முக்கியமான பங்கினை வகித்தார்.
இந்நிலையில், அவர் மார்ச். 28ஆம் தேதிதான் அணியில் இணைவார் எனக் கூறப்பட்டுள்ளது. மற்ற வெளிநாட்டு வீரர்கள் மார்ச் 21ஆம் தேதியே அணியில் இணைவார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் வீரர் அஸமதுல்லா ஓமர்சாய் மார்ச் 23ல் இணைவார். பாகிஸ்தான் அவரது நாட்டின் மீது போர்த் தொடுத்துள்ளதால் அவரும் இக்கட்டான நிலையில் இருக்கிறார்கள்.
மார்கோ யான்சென் அவரது வீட்டில் சிறிது காலம் தங்கியிருந்து வர, ரிக்கி பாண்டிங் முழுமையான ஆதரவாக தெரிவித்துள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு தகவல் கிடைத்துள்ளது.
கடந்த சீசனில் 16 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். பேட்டிங்கிலும் சிறப்பான செயல்பாடுகளை வழங்கிய அவர் சிறந்த ஆல்ரவுண்டராகவே மாறியிருக்கிறார்.
துபை, அபுதாபி விமான நிலையங்கள் குறைவாகவே செயல்பட்டு வருவதால் மேற்கில் இருக்கும் வீரர்கள் இந்தியாவுக்கு வருவதில் சற்று சிரமம் இருக்கவே செய்கிறது. பஞ்சாப் அணி தனது முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை மார்ச் 31ஆம் தேதி சந்திக்கிறது.
Summary
Ponting approves late arrival of Jansen in wake of delayed departure post T20WC
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொடர் தோல்விகளால் வீரர்கள் சோர்வடைந்துவிட்டனர்: சிஎஸ்கே பயிற்சியாளர்

ஐபிஎல் 2026: மும்பையை வீழ்த்தி ராஜஸ்தான் வெற்றி - புகைப்படங்கள்

டாப் ஆர்டரில் கலக்கும் இளம் இந்திய வீரர்கள்; ரிக்கி பாண்டிங் பாராட்டு!

முதல் அரையிறுதி: மார்கோ யான்சென் அதிரடி; நியூசிலாந்துக்கு 170 ரன்கள் இலக்கு!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



