நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் க்ளென் ஃபிலிப்ஸ் விமானத்தை இயக்கி, தரையிறக்கிய விடியோ இணையத்தில் பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளது.
நியூசிலாந்து அணியின் பேட்டர், பந்து வீச்சாளர், ஃபீல்டர் மற்றும் விக்கெட் கீப்பர் என பன்முகத்தன்மை கொண்ட ஆல்ரவுண்டரான க்ளென் ஃபிலிப்ஸை அறியாத கிரிக்கெட் ரசிகர்கள் இருக்க இயலாது. பேட்டிங்கில் அதிரடி காட்டும் ஃபிலிப்ஸ், தனது சுழற்பந்து வீச்சில் எதிரணி வீரர்களைத் திணறடிப்பார்.
ஒரு போட்டியில் பேட்டிங் - பந்துவீச்சு சரியாக அமையவில்லை என்றாலும், பாய்ண்ட், எக்ஸ்ட்ரா கவர் திசைகளின் நின்று பறந்து பறந்து பந்துகளைப் பிடித்து எதிரணி வீரர்களையும் ரசிகர்களையும் ஆச்சரியப்படுத்தக் கூடியவர் ஃபிலிப்ஸ். இவர் ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காவும் விளையாடி வருகிறார்.
இவரால் செய்ய முடியாதது ஏதாவது இருக்கிறதா? என்று திகைக்க வைக்கும் வகையில், நியூசிலாந்தின் ஆக்லாந்து ஆர்ட்மோர் விமானப் பயிற்சி நிறுவனத்தில் சிறிய வகை விமானம் ஒன்றை இயக்கி அதனை தரையிறக்கி அசத்தியிருக்கிறார். அந்த விடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ள நிலையில், அந்த விடியோ பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளது.
விமானப் பயிற்சி பள்ளியில் நேற்று (மார்ச் 17) விமானிக்கான பயிற்சி பெற்ற க்ளென் ஃப்லிப்ஸ் அங்குள்ள பணியாளர்களுடன் பேசி மகிழ்ந்த அவர், சிறிய ரக விமானத்தை இயக்கிய அதனை தரையிறக்கி அசத்தியுள்ளார்.
பறப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவரான ஃபிலிப்ஸ், தன்னிடம் நிறைய பணம் இருந்தலோ அல்லது கிரிக்கெட் வாழ்க்கைக்கு வராமல் இருந்தாலோ தான் ஒரு விமானி ஆகியிருப்பதாகத் தெரிவித்திருந்தார். அதேபோலவே, விமானத்தை இயக்கி அசத்தியுள்ளார்.
இதுகுறித்து க்ளென் ஃபிலிப்ஸ் பேசுகையில், “ஆம், விமானத்தில் பறப்பதில் எனக்கு மிகுந்த ஆர்வமிருக்கிறது. என்னிடம் அதிகளவில் பணம் இருந்திருந்தால், சிறிய வயதில் கிரிக்கெட்டை தேர்வு செய்யாமல், விமானியாகியிருப்பேன்.
நான் என்னுடைய வேலை எதையும் பற்றி கவலைப்படாமல், மலைகளுக்குச் சென்று பொழுதுபோக்குகளை போக்கி மகிழ்ச்சியாக இருக்க விரும்புவேன். கிரிக்கெட்டை தவிர்த்து வேலைக்குச் செல்லும் சூழல் இருந்தால், விமானி ஆவதுதான் என் முதல் தேர்வாக இருக்கும்” என்றார் ஃபிலிப்ஸ்.
Summary
Glenn Phillips flaunted his skills as a pilot as he landed a small aircraft in Auckland. Phillips has been vocal about his ambition of being a pilot and considers it to be a career option after retiring from cricket.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அமெரிக்காவின் எஃப்-18 விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்! - விடியோ

நியூசிலாந்து வீரர்களைப் பாராட்டிய கேப்டன் மிட்செல் சாண்ட்னர்!

விமானம் ஓட்டி அசத்திய நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் க்ளென் பிலிப்ஸ்!

குல்தீப் யாதவ் திருமண ஆல்பம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



