மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

நியூசிலாந்து வீரர்களைப் பாராட்டிய கேப்டன் மிட்செல் சாண்ட்னர்!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் அபார வெற்றி பெற்றதையடுத்து, நியூசிலாந்து வீரர்களை அந்த அணியின் கேப்டன் மிட்செல் சாண்ட்னர் பாராட்டியுள்ளார்.

News image

நியூசிலாந்து அணியின் கேப்டன் மிட்செல் சாண்ட்னர்

Updated On :20 மார்ச் 2026, 12:46 pm

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் அபார வெற்றி பெற்றதையடுத்து, நியூசிலாந்து வீரர்களை அந்த அணியின் கேப்டன் மிட்செல் சாண்ட்னர் பாராட்டியுள்ளார்.

தென்னாப்பிரிக்க அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது டி20 போட்டி ஆக்லாந்தில் இன்று (மார்ச் 20) நடைபெற்றது.

இந்தப் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. டி20 தொடரிலும் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

இந்த நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் மிகவும் சிறப்பாக செயல்பட்ட நியூசிலாந்து வீரர்களை அந்த அணியின் கேப்டன் மிட்செல் சாண்ட்னர் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த பிறகு மிட்செல் சாண்ட்னர் பேசியதாவது: டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்ததன் மூலம், ஆடுகளத்தின் சூழலை எங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டோம். எங்களது வேகப் பந்துவீச்சாளர்கள் மிகவும் சிறப்பாக செயல்பட்டு தென்னாப்பிரிக்காவுக்கு நெருக்கடி அளித்தார்கள். பென் சியர்ஸ் மற்றும் கைல் ஜேமிசன் மிகவும் சிறப்பாக பந்துவீசினார்கள். ஜேம்ஸ் நீஷம் வீசிய மூன்று ஓவர்களும் எங்களுக்கு சிறப்பாக அமைந்தது.

ஜெரால்டு கோட்ஸீ அபாரமாக பந்துவீசியதால், இலக்கை துரத்திப் பிடிப்பது சவாலானதாக இருந்தது. ஆனால், எங்களது தொடக்க ஆட்டக்காரர்கள் அழுத்தத்தை எடுத்துக் கொள்ளாமல் சிறப்பாக விளையாடினர் என்றார்.

நியூசிலாந்து - தென்னாப்பிரிக்கா இடையேயான நான்காவது டி20 போட்டி நாளை மறுநாள் (மார்ச் 22) வெலிங்டனில் தொடங்குவது குறிப்பிடத்தக்கது.

Summary

New Zealand captain Mitchell Santner has praised his players after their impressive win in the third T20I against South Africa.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.