காபூல் மருத்துவமனையை பாகிஸ்தான் தாக்கியது போர்க்குற்றம் என ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள 2000 படுக்கைகள் கொண்ட ஓமித் போதைப்பொருள் மறுவாழ்வு மருத்துவமனை மீது திங்கள்கிழமை (மார்ச் 16) இரவு நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் சுமார் 400 பேர் கொல்லப்பட்டதாகவும், 300-க்கும் பேர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதலில் உயிரிழப்புகள் அதிகரிக்கும் என்ற அச்சம் நிலவி வருகிறது.
இந்த நிலையில், பாகிஸ்தான் நடத்திய கொடூர வான்வழித் தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் ரஷீத்கான், முகமது நபி உள்ளிட்டோர் தங்களது கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக ஆப்கானிஸ்தான் அணி வீரர் ரஷீத்கான் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “காபூலில் பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதல்களால் பொதுமக்கள் பலர் பலியானது மிகுந்த வேதனை அளிக்கிறது. பொதுமக்களின் வீடுகள், பள்ளி, கல்லூரிகள், மருத்துவமனைகள் மீது திட்டமிட்டோ அல்லது தவறுதலாகவோ குறிவைத்துத் தாக்குவது போர்க்குற்றம்.
புனிதமான ரமலான் மாதத்தில் மனித உயிர்கள் மீது காட்டப்படும் அலட்சியம் மிகுந்த கவலைக்குரியது. இந்தக் கொடூரத் தாக்குதலுக்கு காரணமாகவர்களை ஐக்கிய நாடுகள் அவையும், மனித உரிமை முகமைகளும் பொறுப்பேற்கச் செய்ய வேண்டும்.
இந்தக் கடினமான சூழலில் நான் ஆப்கானிஸ்தான் மக்களுடன் நிற்கிறேன். நாம் மீண்டு வருவோம். மீண்டும் எழுச்சி பெறுவோம். நாம் எப்போதும் செய்கிறோம். இன்ஷா அல்லா!” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Summary
Afghanistan cricket stars Rashid Khan and Mohammad Nabi have strongly condemned reported Pakistani airstrikes in Kabul. The two players expressed grief and anger over civilian casualties after a hospital was reportedly struck during the attack.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முல்லான்பூர் டெஸ்ட்: இந்தியா பேட்டிங்!

ஆப்கானிஸ்தான் தொடரிலிருந்து விராட் கோலி விலகல்! இந்திய அணிக்குப் பெரும் பின்னடைவு!

ரஷிய பொருளாதார மாநாட்டு நகரில் உக்ரைன் பதிலடி தாக்குதல்

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி, ஒருநாள் தொடருக்கான ஆப்கன் அணி அறிவிப்பு!
விடியோக்கள்
#elnino | சூப்பர் எல் நினோ செய்யப்போகும் சம்பவங்கள்: டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் Exclusive

Parimala and co movie review | ஒரு குடும்பமும் ஒரு கொலையும்! | Jayaram | Urvashi | Pandiraaj

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!



