தில்லி கேபிடல்ஸ் அணியின் ஆலோசகர் பொறுப்பிலிருந்து விலகுவதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் 19-வது சீசன் இன்னும் இரண்டு வாரங்களில் தொடங்கவுள்ள நிலையில், அணிகள் ஒவ்வொன்றாக பயிற்சியை தொடங்க ஆரம்பித்துவிட்டன. வெளிநாட்டு வீரர்கள் தங்களது அணிகளுடன் இணைந்து பயிற்சியைத் தொடங்க தயாராகி வருகின்றனர்.
இந்த நிலையில், எதிர்வரும் ஐபிஎல் சீசனில் தில்லி கேபிடல்ஸின் ஆலோசகர் பொறுப்பிலிருந்து விலகுவதாக சமூக வலைத்தளப் பதிவின் மூலம் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: எதிர்வரும் ஐபிஎல் சீசனில் தில்லி கேபிடல்ஸ் அணியின் ஆலோசகராக என்னால் செயல்பட முடியாது. ஆலோசகர் வேலைக்குத் தேவையான நேரத்தை என்னால் கொடுக்க முடியாது. இந்த ஐபிஎல் சீசனில் தில்லி கேபிடல்ஸ் வீரர்கள் சிறப்பாக விளையாட அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இருப்பினும், ஐபிஎல் தொடரில் என்னை நீங்கள் வர்ணணையாளராகப் பார்க்கலாம். ஐபிஎல் தொடர் உலகின் மிகச் சிறந்த டி20 தொடர். எதிர்வரும் ஐபிஎல் சீசனை ஆவலாக எதிர்நோக்கி காத்திருக்கிறேன் எனப் பதிவிட்டுள்ளார்.
இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான கெவின் பீட்டர்சன் 5 ஐபிஎல் சீசன்களில் மூன்று வெவ்வேறு அணிகளுக்காக விளையாடியுள்ளார். அவர் தில்லி கேபிடல்ஸ் (தில்லி டேர்டெவில்ஸ்) அணிக்காகவும் விளையாடியிருக்கிறார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை கேப்டனாகவும் அவர் வழிநடத்தியிருக்கிறார்.
கடந்த ஆண்டின் தொடக்கத்தில் தில்லி கேபிடல்ஸ் அணியின் ஆலோசகராக கெவின் பீட்டர்சன் நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Summary
Former England captain Kevin Pietersen has announced that he is stepping down from his role as advisor to the Delhi Capitals team.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தோல்விக்குக் காரணம் இதுதான்... மனம் திறந்த தில்லி கேப்டன்!

சிஎஸ்கே அணிக்கு ஆலோசகராகும் கெவின் பீட்டர்சன்? கோரிக்கையும் கிண்டலும்!

மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக தில்லி கேபிடல்ஸ் டாப் ஆர்டர் சிறப்பாக செயல்படுமா?
சமீர் ரிஸ்வி அதிரடியில் தில்லி கேபிடல்ஸ் வெற்றி!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



