ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் பில் சால்ட்டை விடுவித்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்வாகம் தவறு செய்துவிட்டதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 28 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாதை எதிர்கொள்கிறது. ஐபிஎல் தொடங்குவதற்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ளதால், அணிகள் அனைத்தும் பயிற்சியில் ஈடுபட ஆரம்பித்துள்ளன.
இந்த நிலையில், ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் பில் சால்ட்டை விடுவித்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்வாகம் தவறு செய்துவிட்டதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.

அனில் கும்ப்ளே (கோப்புப்படம்)
இது தொடர்பாக அவர் பேசியதாவது: இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. அது ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸின் மூன்றாவது சாம்பியன் பட்டம். கொல்கத்தா அணி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வெல்ல ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் பில் சால்ட் இருவரும் மிக முக்கியப் பங்கு வகித்தனர். ஆனால், அவர்கள் இருவரையும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்வாகம் விடுவித்துவிட்டது.
அணியில் வீரர்களை தக்கவைப்பதில் கொல்கத்தா அணி நிர்வாகத்திடம் தொடர்ச்சியாக சிறப்பான தெரிவுகள் இல்லை. ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் பில் சால்ட்டை விடுவித்து அணி நிர்வாகம் தவறான முடிவை எடுத்துவிட்டது. கோப்பையை வென்று கொடுத்த கேப்டன் விடுவிக்கப்பட்டார். அஜிங்கியா ரஹானே மிகவும் அனுபவம் வாய்ந்த வீரர். ஆனால், அவர் இதுவரை ஐபிஎல் தொடரில் கேப்டனாக சாம்பியன் பட்டம் வென்றதில்லை. அதனால், கோப்பையை வென்று கொடுத்த ஷ்ரேயாஸ் ஐயர் அணியில் இருந்திருந்தால், கொல்கத்தா அணிக்கு அது மிகவும் சாதகமான விஷயமாக இருந்திருக்கும் என்றார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிலிருந்து விடுவிக்கப்பட்ட ஷ்ரேயாஸ் ஐயர், பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டு அந்த அணியை கடந்த சீசனில் இறுதிப்போட்டி வரை அழைத்துச் சென்றது குறிப்பிடத்தக்கது.
Summary
Anil Kumble has stated that the Kolkata Knight Riders team management made a mistake by releasing Shreyas Iyer and Phil Salt.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

19 ஆண்டு ஐபிஎல் வரலாற்றில் மோசமான சாதனையில் இணைந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ்!

ஐபிஎல் வரலாற்றில் முதல் முறை... கேகேஆர் அணிக்கு முதல் வெற்றி எப்போது?

ரஹானே, ரகுவன்ஷி அரைசதம்: மும்பை இந்தியன்ஸுக்கு 221 ரன்கள் இலக்கு!

கம்பீர் தலைமையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வலுவான அணியாக இருந்தது: டு பிளெஸ்ஸிஸ்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



