ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

டி20 உலகக் கோப்பை: தென்னாப்பிரிக்காவுக்கு 159 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா!

டி20 உலகக் கோப்பைத் தொடரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் விளையாடிய இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் எடுத்துள்ளது.

Shafali Verma driving the ball to the boundary.

பந்தை பவுண்டரிக்கு விரட்டும் ஷஃபாலி வர்மா - படம் | பிசிசிஐ

Published On :21 ஜூன் 2026, 8:52 pm IST

டி20 உலகக் கோப்பைத் தொடரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் விளையாடிய இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் எடுத்துள்ளது.

மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடரில் மான்செஸ்டரில் நடைபெற்று வரும் இன்றைய ஆட்டத்தில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.

முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் எடுத்துள்ளது.

இந்திய அணியில் அதிகபட்சமாக ஷஃபாலி வர்மா 15 பந்துகளில் 31 ரன்கள் எடுத்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். அவரைத் தொடர்ந்து, தீப்தி சர்மா 29 ரன்கள், கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் 24 ரன்கள், ஸ்மிருதி மந்தனா 17 ரன்கள் மற்றும் யாஷ்திகா பாட்டியா 15 ரன்கள் எடுத்தனர். மற்ற வீராங்கனைகள் பெரிதாக ரன்கள் எடுக்கவில்லை.

தென்னாப்பிரிக்கா தரப்பில் மாரிஸேன் காப் மற்றும் ஷப்னிம் இஸ்மாயில் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். நான்குலுலேகோ மிலாபா, அயபோங்கா காகா மற்றும் நடின் டி கிளர்க் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி தென்னாப்பிரிக்க அணி களமிறங்குகிறது.

Summary

Batting first in the T20 World Cup match against South Africa, the Indian team scored 158 runs for the loss of 7 wickets.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.