ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

முத்தரப்பு டி20 தொடருக்கான தென்னாப்பிரிக்க அணி அறிவிப்பு!

ஜிம்பாப்வே மற்றும் நமீபியா உடனான முத்தரப்பு டி20 தொடருக்கான தென்னாப்பிரிக்க அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (ஆகஸ்ட் 11) அறிவித்துள்ளது.

south african players

தென்னாப்பிரிக்க அணி வீரர்கள் (கோப்புப் படம்) - படம் | AP

Published On :11 ஆகஸ்ட் 2026, 4:50 pm IST

ஜிம்பாப்வே மற்றும் நமீபியா உடனான முத்தரப்பு டி20 தொடருக்கான தென்னாப்பிரிக்க அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (ஆகஸ்ட் 11) அறிவித்துள்ளது.

தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியா இடையேயான முத்தரப்பு டி20 தொடர் வருகிற ஆகஸ்ட் 28 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 6 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடர் நமீபியாவில் நடைபெறுகிறது.

இந்த முத்தரப்பு டி20 தொடர் நிறைவடைந்த பிறகு, தென்னாப்பிரிக்க அணி நமீபியாவுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. முத்தரப்பு டி20 தொடரில் விளையாடும் தென்னாப்பிரிக்க அணியே, நமீபியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் விளையாடவுள்ளது.

முத்தரப்பு டி20 தொடருக்கான தென்னாப்பிரிக்க அணி விவரம்

ஜோர்ன் ஃபோர்ட்டின் (கேப்டன்), ஈதன் பாஷ், டெவால்ட் பிரேவிஸ், டோனி டி ஸார்ஸி, கனோர் எஸ்டர்ஹூசன், ஜோர்டான் ஹெர்மேன், ரூபின் ஹெர்மேன், டுயன் ஜேன்சன், குவெனா மபாகா, குபானி மோகோனா, குபா பீட்டர், லுஹான் டி பிரிட்டோரியஸ், லுதோ சிபாம்லா, ஜேசன் ஸ்மித், பிரேநாளன் சுப்பராயன்.

Summary

The South African cricket board announced today the squad for the T20 tri-series involving Zimbabwe and Namibia.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.