வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் எடுத்துள்ளது.
வங்கதேசம் - ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது டி20 போட்டி சட்டோகிராமில் இன்று (ஜூன் 19) நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.
மாட் ரென்ஷா, டிம் டேவிட் அதிரடி!
முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் எடுத்துள்ளது.
அந்த அணியில் டாப் ஆர்டர் பேட்டர்கள் பெரிதாக ரன்கள் குவிக்கவில்லை. தொடக்க ஆட்டக்காரர்களான ஜோஷ் இங்லிஷ் 11 ரன்களும், கேப்டன் மிட்செல் மார்ஷ் 20 ரன்களும் எடுத்தனர். கூப்பர் கானலி ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து, மாட் ரென்ஷா மற்றும் டிம் டேவிட் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தது.
அதிரடியாக விளையாடிய டிம் டேவிட் 26 பந்துகளில் 45 ரன்கள் எடுத்தார். அதில் 2 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். மாட் ரென்ஷா 52 பந்துகளில் 89 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் அடங்கும்.
வங்கதேசம் தரப்பில் நசும் அகமது இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அப்துல் காஃபர் சாக்லைன், நஹித் ராணா, முஷ்பிகர் ரஹ்மான் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி வங்கதேசம் விளையாடி வருகிறது.
Summary
Batting first in the second T20 match against Bangladesh, the Australian team scored 196 runs for the loss of 5 wickets.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வங்கதேசத்தை வீழ்த்தி டி20 தொடரைக் கைப்பற்றிய ஆஸ்திரேலியா!

மூவர் அரைசதம் விளாசல்; ஒருநாள் தொடரை முழுமையாகக் கைப்பற்றுமா வங்கதேசம்?

மகளிர் உலகக் கோப்பை: தென்னாப்பிரிக்காவுக்கு 173 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆஸி.!

ரஹ்மனுல்லா குர்பாஸ் சதம், அறிமுக வீரர்கள் அபார பந்துவீச்சு; இந்தியாவுக்கு 195 ரன்கள் இலக்கு!
விடியோக்கள்

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK




