ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் ஹர்ஷித் ராணா சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி சென்னை சேப்பாக்கம் திடலில் நாளை (ஜூன் 20) நடைபெறுகிறது. மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் ஏற்கனவே கைப்பற்றிவிட்ட நிலையில், கடைசிப் போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை முழுமையாக வெல்லும் முனைப்பில் இந்திய அணி களமிறங்குகிறது.
இந்த நிலையில், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் வேகப் பந்துவீச்சாளர் ஹர்ஷித் ராணா சேர்க்கப்பட்டுள்ளார்.
காயத்திலிருந்து குணமடைந்துவிட்ட ஹர்ஷித் ராணா, இந்திய அணியுடன் இணைந்து சென்னை சேப்பாக்கம் திடலில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
மூன்றாவது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி விவரம்
ஷுப்மன் கில் (கேப்டன்), ரோஹித் சர்மா, ஷ்ரேயாஸ் ஐயர் (துணைக் கேப்டன்), கே.எல்.ராகுல் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), நிதீஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, பிரின்ஸ் யாதவ், குர்னூர் பிரார், ஹர்ஷ் துபே, யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஹர்ஷித் ராணா.
Summary
Harshit Rana has been included in the Indian squad for the ODI series against Afghanistan.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









