டி20 உலகக் கோப்பைத் தொடரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் எடுத்துள்ளது.
மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடரில் மான்செஸ்டரில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.
போஃப் லிட்ச்ஃபீல்டு அரைசதம்; தென்னாப்பிரிக்காவுக்கு 173 ரன்கள் இலக்கு!
முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் எடுத்துள்ளது.
ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக போஃப் லிட்ச்ஃபீல்டு 24 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார். அதில் 9 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். அவரைத் தொடர்ந்து, எல்லிஸ் பெரி 36 ரன்களும், ஜார்ஜியா வேர்ஹம் 32 ரன்களும் எடுத்தனர். அன்னாபெல் சதர்லேண்ட் 21 ரன்கள் எடுத்தார். மற்ற வீராங்கனைகள் பெரிதாக ரன்கள் குவிக்கவில்லை.
தென்னாப்பிரிக்கா தரப்பில் நடின் டி கிளர்க், நான்குலேகோ மிலாபா மற்றும் அயபோங்கா காகா தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். மாரிஸேன் காப் மற்றும் ஷப்னிம் இஸ்மாயில் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி தென்னாப்பிரிக்க அணி விளையாடி வருகிறது.
Summary
Batting first in the T20 World Cup match against South Africa, the Australian team scored 172 runs for the loss of 8 wickets.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கேப்டன் கேத்ரின் பிரைஸ் அசத்தல்; உலகக் கோப்பையை வெற்றியுடன் தொடங்கிய ஸ்காட்லாந்து!

மகளிர் உலகக் கோப்பை: அயர்லாந்துக்கு 162 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஸ்காட்லாந்து!








