நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

நான் இஷான் கிஷனின் மிகப் பெரிய ரசிகர்: முன்னாள் இந்திய கேப்டன்

தான் இஷான் கிஷனின் மிகப் பெரிய ரசிகர் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தெரிவித்துள்ளார்.

News image

இஷான் கிஷன் - படம் | பிசிசிஐ

Updated On :18 ஜூன் 2026, 6:44 pm IST

தான் இஷான் கிஷனின் மிகப் பெரிய ரசிகர் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் இளம் வீரர்களில் ஒருவரான இஷான் கிஷன் இரண்டு ஆண்டுகளாக தேசிய அணியில் இடம்பெறாமலிருந்தார். இந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பைத் தொடருக்கு முன்பாக இந்திய அணியில் இஷான் கிஷன் இடம் பிடித்தார்.

உலகக் கோப்பைத் தொடருக்குப் பிறகு, இந்திய அணி ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் தற்போது விளையாடி வருகிறது. ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நேற்று (ஜூன் 17) நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் இஷான் கிஷன் சதம் விளாசி அசத்தினார். அவர் அதிரடியாக 79 பந்துகளில் 125 ரன்கள் (14 பவுண்டரிகள், 7 சிக்ஸர்கள்) எடுத்தார்.

இந்த நிலையில், டி20 மற்றும் ஒருநாள் போட்டிகள் மட்டுமின்றி டெஸ்ட் போட்டியிலும் இஷான் கிஷனால் நன்றாக விளையாட முடியும் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: நான் இஷான் கிஷனின் மிகப் பெரிய ரசிகர். நீண்ட நாள்களாக இந்திய அணியில் இடம்பெறாமலிருந்த அவர், தனது சிறப்பான ஆட்டத்தால் மீண்டும் அணியில் இடம்பெற்றார். அவர் மிகவும் அற்புதமாக விளையாடி வருகிறார். அவருடைய ஆட்டம் எனக்கு மிகவும் பிடிக்கும். இஷான் கிஷன் அனைத்து வடிவிலான போட்டிகளுக்குமான வீரர். அவரால் டெஸ்ட் போட்டியிலும் விளையாட முடியும். துரதிருஷ்டவசமாக, டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் அவரை விளையாட வைப்பதற்கு இடமில்லை என்றார்.

வீரர்களுக்கான பிசிசிஐ மத்திய ஒப்பந்தத்தில் இருந்து கடந்த 2024 ஆம் ஆண்டு இஷான் கிஷன் நீக்கப்பட்டதும், அதன் பின் அவர் உள்ளூர் போட்டிகளில் மிகவும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி மீண்டும் அணியில் இடம்பிடித்ததும் குறிப்பிடத்தக்கது.

Summary

Former Indian team captain Krishnamachari Srikkanth has stated that he is a huge fan of Ishan Kishan.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.