திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

டி20 உலகக் கோப்பை வெற்றி! இஷான் கிஷனுக்கு ரூ. 1 கோடி வெகுமதி வழங்கிய பிகார் அரசு!

இந்திய கிரிக்கெட் வீரர் இஷான் கிஷனுக்கு பிகார் முதல்வர் சாம்ராட் சௌதரி ரூ. 1 கோடி வெகுமதி வழங்கினார்...

News image

இஷான் கிஷனுக்கு ரூ.1 கோடி வெகுமதி வழங்கிய பிகார் முதல்வர் சாம்ராட் சௌதரி... - எக்ஸ்

Updated On :15 மே 2026, 5:44 pm IST

டி20 உலகக் கோப்பை போட்டியில் வெற்றி பெற்ற இந்திய கிரிக்கெட் அணியில் சிறப்பாக விளையாடிய வீரர் இஷான் கிஷனுக்கு பிகார் அரசு ரூ.1 கோடி வெகுமதி வழங்கியுள்ளது.

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில், அதிக ரன்கள் எடுத்த ஆட்டக்காரர்களில் ஒருவரான இந்திய வீரர் இஷான் கிஷன் 9 இன்னிங்ஸ்களுக்கு 317 ரன்களை குவித்து அசத்தினார். இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டத்தை வெல்வதற்கு இஷான் கிஷனின் பங்களிப்பு முக்கியமாதாக அமைந்திருந்தது.

இந்த நிலையில், உலகக் கோப்பை போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய வீரர் இஷான் கிஷனுக்கு பிகார் முதல்வர் சாம்ராட் சௌதரி இன்று (மே 15) ரூ. 1 கோடி வெகுமதிக்கான காசோலையை வழங்கியுள்ளார்.

இந்த நிகழ்வில், இஷான் கிஷனின் குடும்பத்தினர் மற்றும் பிகாரைச் சேர்ந்த வேகப் பந்து வீச்சாளர் சாகிப் ஹுசைன் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்களும் கலந்துகொண்டனர்.

முன்னதாக, நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டிகளில் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வரும் இஷான் கிஷன் முதல் 7 போட்டிகளில் பாட் கம்மின்ஸுக்கு பதிலாக கேப்டனாக களமிறங்கினார். இவரின் தலைமையில் 4 போட்டிகளில் ஹைதராபாத் அணி வென்றது குறிப்பிடத்தக்கது.

Summary

The Bihar government has awarded ₹1 crore to Ishan Kishan who was part of the Indian cricket team that won the T20 World Cup.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.