ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

குற்றத்தை ஒப்புக்கொண்ட டேவிட் வார்னர்..! 9 மாதங்கள் சிறை?

முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டது குறித்து...

David Warner faces legal trouble, charged with drink driving in Sydney

டேவிட் வார்னர் - படம்: பிடிஐ

Published On :22 ஜூலை 2026, 4:15 pm IST

முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் தான் கடந்த ஏப்ரலில் குடித்துவிட்டு காரை ஓட்டியதை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார்.

சிட்னியில் மரூப்ரா, மலபார் சாலையில் நியூ சௌத் வேல்ஸ் காவல்துறையினர் நடத்திய சோதனையில் அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் டேவிட் வார்னர் கைது செய்யப்பட்டதாக கடந்த ஏப்ரல் மாதம் ஆஸ்திரேலிய ஊடகங்கள் தகவல் தெரிவித்தன.

காவலர்கள் நடத்திய சோதனையில் 0.104 என்ற அளவில் மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. இது ஆஸ்திரேலியாவில் அனுமதிக்கப்பட்ட அளவை விட இரண்டு மடங்கு கூடுதலானது எனக் கூறப்படுகிறது. இதனால், அவர் மீது அபராதம் விதிக்கப்பட்டு, மரூப்ரா காவல்நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

இந்தக் குற்றத்துக்கு 9 மாதங்கள் சிறை தண்டனை வழங்கப்படுமா அல்லது 2 லட்சம் அபாரதம் விதிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

வரும் ஆகஸ்ட் 18ஆம் தேதி டேவிட் வார்னருக்கான தண்டனை அறிவிக்கப்படும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வார்னரின் வழக்கறிஞர் பாபி ஹில் கூறியிருப்பதாவது:

வார்னர் என்ன தவறு செய்தார் என்பது அவருக்குத் தெரியும். உபேர் அழைத்து செல்லாமல் அவராகவே காரை ஓட்டிய முட்டாள்தனமான முடிவை அவர் ஒப்புக்கொண்டார்.

இயேசுவின் உயிர்த்தெழுதல் அன்று ஒரு கிளாஸ் வைன் எடுத்துக்கொண்டது தவறில்லை. சிலர் அதை முற்றிலும் தவறென நினைக்கலாம். அவர் செய்த குற்றம் பிளான் பி இருக்கும்போது முட்டாள்தனமான பிளான் ஏவை தேர்வு செய்ததுதான் என்றார்.

பிபிஎல் தொடரில் சிட்னி தண்டர் அணிக்கு கேப்டனாக இருக்கும் டேவிட் வார்னருக்கு இது புதிய சிக்கலை அளித்துள்ளது. இதனால், கேப்டன்சியை இழக்கும் வாய்ப்பிருக்கிறது.

Summary

David Warner admits to drunk-driving charge

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.