ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

இங்கிலாந்து ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்ட பிரண்டன் மெக்கல்லம்!

தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட பிரண்டன் மெக்கல்லம் இங்கிலாந்து ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்டுள்ளார்.

Brendon Mccullum

பிரண்டன் மெக்கல்லம் (கோப்புப் படம்)

Published On :14 ஜூலை 2026, 6:19 pm IST

தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட பிரண்டன் மெக்கல்லம் இங்கிலாந்து ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்டுள்ளார்.

டெஸ்ட் போட்டிகளுக்கான இங்கிலாந்து அணியின் தலைமைப் பயிற்சியாளராக பிரண்டன் மெக்கல்லம் கடந்த 2022 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். பிரண்டன் மெக்கல்லம் மற்றும் பென் ஸ்டோக்ஸ் கூட்டணியில் இங்கிலாந்து அணி டெஸ்ட் போட்டிகளில் தொடக்கத்தில் மிகவும் சிறப்பாக செயல்பட்டது. முதல் 11 டெஸ்ட் போட்டிகளில் இந்தக் கூட்டணி 10 வெற்றிகளைப் பதிவு செய்து அசத்தியது.

இருப்பினும், ஆரம்பத்தில் வெற்றிக் கூட்டணியாக பார்க்கப்பட்ட பிரண்டன் மெக்கல்லம் மற்றும் பென் ஸ்டோக்ஸ் கூட்டணி நாளடைவில் தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்தது. இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர்கள் உள்பட பலரும் இங்கிலாந்தின் அதிரடியாக விளையாடும் அணுகுமுறையை (பேஸ்பால் யுக்தி) கடுமையாக விமர்சிக்கத் தொடங்கினர். ஆஷஸ் தொடரை இழந்த பிறகு விமர்சனங்கள் அதிகமாகி தலைமைப் பயிற்சியாளர் மற்றும் கேப்டன் இருவரும் நீக்கப்பட வேண்டும் என்ற குரல்களும் எழுந்தன.

இந்த நிலையில், டெஸ்ட் போட்டிகளுக்கான தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து பிரண்டன் மெக்கல்லம் நீக்கப்பட்டார். தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதையடுத்து, இங்கிலாந்து ரசிகர்களிடம் மெக்கல்லம் மன்னிப்புக் கேட்டுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: டெஸ்ட் போட்டிகளுக்கான இங்கிலாந்து அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளேன். இந்த முடிவு எனக்கு ஏமாற்றத்தைத் தந்தது. ஆனால், இந்த முடிவை நான் முழுவதுமாக மதிக்கிறேன். முடிவுகளை அடிப்படையாகக் கொண்டுள்ள தொழிலில் இருக்கிறோம். ஆனால், இங்கிலாந்து அணி பெற்றுள்ள வெற்றிகள் போதுமானதாக இல்லை. அணியை வேறு யாரேனும் ஒருவர் வழிநடத்துவதற்கான நேரம் வந்துவிட்டது என்றார்.

டெஸ்ட் போட்டிகளுக்கான இங்கிலாந்து அணியின் தலைமைப் பயிற்சியாளராக அந்த அணிக்கு 49 போட்டிகளில் மெக்கல்லம் பயிற்சியளித்துள்ளார். அவருடைய வழிகாட்டுதலில் இங்கிலாந்து அணி 27 வெற்றிகள், 20 தோல்விகள் மற்றும் இரண்டு போட்டிகளில் டிராவை சந்தித்துள்ளது.

Summary

Brendon McCullum, who has been removed from the role of head coach, has apologized to England fans.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.