ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

இங்கிலாந்து டெஸ்ட் பயிற்சியாளர் ஆகிறாரா அஸ்வின்?

இங்கிலாந்து டெஸ்ட் பயிற்சியாளராக அஸ்வின் நியமிக்கப்படவிருப்பதாக பரவும் செய்தி பற்றி...

Ravichandran ashwin

ரவிச்சந்திரன் அஸ்வின் - கோப்புப் படம்

Published On :13 ஜூலை 2026, 1:06 pm IST

இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் நியமிக்கப்படவுள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல் பரவி வருகின்றன.

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பிரெண்டன் மெக்கல்லம், டெஸ்ட் அணியின் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து மட்டும் விலகுவதாக கடந்த வாரம் அறிவித்திருந்தார்.

இதையடுத்து பலரின் பெயர்கள் அப்பொறுப்புக்கு அடிபட்டு வருகின்றது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட், அஸ்வின் உள்ளிட்டோரின் பெயர்களும் அதில் அடங்கும்.

அமெரிக்காவில் அஸ்வினுடன் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் பேச்சுவார்த்தை நடத்தியதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

உண்மை என்ன?

பரவலாக வதந்திகள் பரவினாலும், அஸ்வினை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அணுகியதற்கான உறுதி செய்யப்பட்ட எந்த தகவலும் இல்லை.

அமெரிக்காவில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய அதிகாரிகளை அஸ்வின் சந்தித்தது, ஐரோப்பிய டி20 பிரீமியர் லீக் குறித்த வர்த்தகப் பேச்சுவார்த்தைகளுடன் தொடர்புடையவை என்றும், பயிற்சியாளர் தொடர்பாக இல்லை என்றும் கூறப்படுகிறது.

மேலும், பயிற்சியாளர் பதவிக்கு அஸ்வினைத் தொடர்பு கொள்ளவோ, பேச்சுவார்த்தை நடத்தவோ இல்லை என்பதை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்ததாக தி சண்டே கார்டியன் தெரிவித்துள்ளது.

யாருக்கு வாய்ப்பு?

இங்கிலாந்தின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ஆண்டி ஃப்ளவர், டெஸ்ட் அணிக்கான பயிற்சியாளராக நியமிக்கப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இங்கிலாந்தை முதலிடத்துக்கு வழிநடத்திய ஃப்ளவர், ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணியின் பயிற்சியாளராக தொடர அனுமதித்தால், இந்தப் பொறுப்பை ஏற்கத் தயாராக இருப்பதாக தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும், இங்கிலாந்து லயன்ஸ் பயிற்சியாளர் ஆண்ட்ரூ ஃபிளிண்டாஃப் மற்றும் ஆப்கனின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ஜொனாதன் ட்ராட் ஆகியோரின் பெயர்களும் பரிசீலனையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Summary

Is Ashwin becoming the England Test coach?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.