ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக தனக்கான அடையாளத்தை உருவாக்க வேண்டும்: முன்னாள் வீரர்

ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக தனக்கென தனியான அடையாளத்தை உருவாக்க வேண்டுமென இந்திய அணியின் முன்னாள் வீரர் தெரிவித்துள்ளார்.

Indian team captain Shreyas Iyer

இந்திய அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் - படம் | பிசிசிஐ

Published On :10 ஜூலை 2026, 9:55 pm IST

ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக தனக்கென தனியான அடையாளத்தை உருவாக்க வேண்டுமென இந்திய அணியின் முன்னாள் வீரர் சபா கரீம் தெரிவித்துள்ளார்.

டி20 போட்டிகளுக்கான இந்திய அணியின் கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் அண்மையில் நியமிக்கப்பட்டார். அவரது தலைமையிலான இந்திய அணி அயர்லாந்துக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரை முழுமையாக இழந்தது. அதன் பின், தற்போது இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரையும் இந்திய அணி இழந்துவிட்டது.

இந்த நிலையில், ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக தனக்கென தனியான அடையாளத்தை உருவாக்க வேண்டுமென இந்திய அணியின் முன்னாள் வீரர் சபா கரீம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஷ்ரேயாஸ் ஐயர் தன்னை ஒரு கேப்டனாக நிரூபித்துக் கொள்ள வேண்டிய நெருக்கடியில் உள்ளார். ஐபிஎல் தொடரில் அவரிடம் பார்த்த கேப்டன்சியை தற்போது பார்க்க முடியவில்லை. கேப்டனாக ஆடுகளத்தில் நின்று விளையாடும்போது, உங்களது பார்ட்னருக்கு நீங்கள் கொடுக்கும் அறிவுரை மிகவும் முக்கியம்.

சர்வதேசப் போட்டிகளில் அவர் கேப்டனாக உருவெடுக்க நேரம் தேவைப்படும். அவர் நன்றாக விளையாடி ரன்கள் குவிக்கிறார். அவரது ஃபார்ம் கேப்டனாக நன்றாக செயல்பட உதவியாக இருக்கும். கேப்டனாக அவருக்கென தனியான அடையாளத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டிய இடத்தில் ஷ்ரேயாஸ் உள்ளார் என்றார்.

Summary

A former Indian team player has stated that Shreyas Iyer needs to carve out a distinct identity for himself as a captain.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.