ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கேப்டனாக முதல் டி20 தொடர் வெற்றி; ஷ்ரேயாஸ் ஐயர் பேசியதென்ன?

இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட பிறகு ஷ்ரேயாஸ் ஐயர் முதல் முறையாக டி20 தொடரை வென்றுள்ளார்.

Indian team captain Shreyas Iyer

இந்திய அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் - படம் | பிசிசிஐ

Published On :25 ஜூலை 2026, 8:49 pm IST

இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட பிறகு ஷ்ரேயாஸ் ஐயர் முதல் முறையாக டி20 தொடரை வென்றுள்ளார்.

டி20 போட்டிகளுக்கான இந்திய அணியின் புதிய கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் அண்மையில் நியமிக்கப்பட்டார். அவரது தலைமையிலான இந்திய அணி அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடர்களில் விளையாடியது. ஷ்ரேயாஸ் தலைமையிலான இந்திய அணி இந்த இரண்டு டி20 தொடர்களையும் இழந்தது.

இந்த நிலையில், தொடர்ச்சியாக இரண்டு டி20 தொடர்களை இழந்ததிலிருந்து மீண்டு ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரை ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய அணி வென்று அசத்தியுள்ளது.

இந்திய அணியின் கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் பொறுப்பேற்ற பிறகு, அவர் தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக டி20 தொடரை வென்றுள்ளது.

இந்த வெற்றி குறித்து போட்டி நிறைவடைந்த பிறகு ஷ்ரேயாஸ் ஐயர் பேசியதாவது: நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். நாங்கள் மிகவும் சிறப்பான வெற்றியைப் பெற்றுள்ளோம். அணியில் உள்ள அனைவரும் தங்களது சிறப்பான பங்களிப்பை வழங்கினார்கள். இஷான் கிஷன் மற்றும் திலக் வர்மா இருவரும் அற்புதமாக விளையாடினார்கள். 180-200 ரன்கள் நல்ல ஸ்கோராக இருக்கும் என நினைத்தேன். ஆனால், 219 ரன்கள் எடுத்தது மிகுந்த மகிழ்ச்சியளித்தது. அணியில் உள்ள வீரர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதால், நாளை நடைபெறும் கடைசிப் போட்டியில் அணியில் சில மாற்றங்கள் இருக்கும் என்றார்.

ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய அணி அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரை 0-2 என்ற கணக்கிலும், இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரை 0-4 என்ற கணக்கிலும் இழந்தது குறிப்பிடத்தக்கது.

Summary

Shreyas Iyer has won a T20 series for the first time since being appointed captain of the Indian team.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.