/

யு19 உலகக் கோப்பை: ஜோரிச் வான் சதம் விளாசல்; இலங்கைக்கு 262 ரன்கள் இலக்கு!

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பைத் தொடரில் இலங்கைக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணி 261 ரன்கள் எடுத்துள்ளது.

News image
- படம் | தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)
Updated On :29 ஜனவரி 2026, 12:35 pm

இணையதளச் செய்திப் பிரிவு

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பைத் தொடரில் இலங்கைக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணி 261 ரன்கள் எடுத்துள்ளது.

19 வயதுக்குட்பட்டோருக்கான ஐசிசி உலகக் கோப்பைத் தொடரில் குயின் ஸ்போர்ட்ஸ் கிளப் திடலில் இன்று (ஜனவரி 29) நடைபெற்று வரும் போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் இலங்கை அணிகள் விளையாடி வருகின்றன.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.

ஜோரிச் வான் சதம் விளாசல்; இலங்கைக்கு 262 ரன்கள் இலக்கு!

டாஸ் வென்று முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 261 ரன்கள் எடுத்தது.

அந்த அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தொடக்க ஆட்டக்காரர் ஜோரிச் வான் சதம் விளாசி அசத்தினார். அவர் 130 பந்துகளில் 116 ரன்கள் எடுத்தார். அதில் 13 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான அட்னான் லகாடியன் 46 ரன்களும், பால் ஜேம்ஸ் 37 ரன்களும் எடுத்தனர்.

இலங்கை தரப்பில் விக்னேஷ்வரன் ஆகாஷ் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். கவிஜா இரண்டு விக்கெட்டுகளையும், சமிகா ஹீனாடிகலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

262 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இலங்கை அணி விளையாடி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.