ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியை இந்திய அணி லேசாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே எச்சரித்துள்ளார்.
ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரில் சென்னை சேப்பாக்கம் திடலில் இன்று (பிப்ரவரி 26) நடைபெறும் போட்டியில் இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் விளையாடுகின்றன.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மிகப் பெரிய தோல்விக்குப் பிறகு இந்திய அணி, ஜிம்பாப்வேவை எதிர்கொள்கிறது. அரையிறுதிக்கு தகுதி பெறுவதற்கான போட்டியில் நீடிக்க இந்திய அணி ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டியில் கண்டிப்பாக வெற்றி பெற்றாக வேண்டும்.

அனில் கும்ப்ளே (கோப்புப்படம்)
இந்த நிலையில், ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியை இந்திய அணி லேசாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக ஜியோஸ்டாரில் அவர் பேசியதாவது: ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி அதன் வழக்கமான அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். ஆனால், ஜிம்பாப்வே அணி மிகவும் சவாலளிக்கும் விதமாக விளையாடக் கூடிய எதிரணி. அவர்களது திறமை மதிக்கப்பட வேண்டும். இந்த உலகக் கோப்பைத் தொடரில் அவர்கள் மிகவும் சிறப்பான வெற்றியைப் பதிவு செய்திருக்கிறார்கள்.
ஆஸ்திரேலிய அணியை அவர்கள் வீழ்த்தியிருக்கிறார்கள். இலங்கைக்கு எதிராக அதன் சொந்த மண்ணிலேயே 179 ரன்களை துரத்திப் பிடித்து அபார வெற்றி பெற்றனர். அந்த அணியின் டாப் 4 பேட்டர்கள் நல்ல ஃபார்மில் இருக்கிறார்கள். பிளெஸ்ஸிங் முசராபானி, பிராட் ஈவன்ஸ் போன்ற உயரமான பந்துவீச்சாளர்கள் அந்த அணியில் இருக்கிறார்கள். அவர்கள் பந்துவீச்சில் அபாரமாக செயல்பட்டுள்ளனர். குறிப்பாக, பவர்பிளேவில் அவர்கள் மிகவும் நன்றாக பந்துவீசக் கூடியவர்கள்.
இந்திய அணி ஜிம்பாப்வேவை லேசாக எடுத்துக் கொள்ள முடியாது. இந்திய அணி அவர்களது மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். ஒவ்வொரு வீரரும் நன்றாக விளையாடி ரன்கள் குவிக்க வேண்டும். அடுத்த பேட்டர் அடிப்பார்கள் என நினைக்காமல் ஒவ்வொருவரும் நன்றாக விளையாட வேண்டும். இந்திய அணிக்கு சாதகமாக முடிவு அமையும் என நம்புகிறேன். இந்திய அணி மிகவும் கவனமாக விளையாட வேண்டும் என்றார்.
Summary
Former Indian captain Anil Kumble has warned the Indian team not to take the match against Zimbabwe lightly.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அர்ஷ்தீப் சிங் செய்த தவறுக்காக நியூசிலாந்து வீரரிடம் மன்னிப்பு கேட்ட இந்திய கேப்டன்!

சஞ்சு சாம்சன் நீக்கம்.. வாழ்த்துப் பதிவை ‘எடிட்’ செய்து வெளியிட்டாரா ஷுப்மன் கில்?

விமர்சித்தவர்களை அமைதியாக்கிய அபிஷேக் சர்மா; முன்னாள் கேப்டன் பாராட்டு!

தோல்வியிலும் மனம் கவர்ந்த ஜிம்பாப்வே வீரர்..! இந்தியாவின் நெட் ரன் ரேட் பாதிப்பு!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



