ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

தோல்வியிலும் மனம் கவர்ந்த ஜிம்பாப்வே வீரர்..! இந்தியாவின் நெட் ரன் ரேட் பாதிப்பு!

தொடக்க வீரராக களமிறங்கி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜிம்பாப்வே வீரர் குறித்து...

India's captain Suryakumar Yadav, left, shake hands with Zimbabwe's Brian Bennett after winning the T20 World Cup cricket match between India and Zimbabwe in Chennai, India, Thursday, Feb. 26, 2026. (AP Photo/Mahesh Kumar A.)

ஜிம்பாப்வே வீரரைப் பாராட்டிய இந்திய கேப்டன். - ஏபி

Published On :27 பிப்ரவரி 2026, 3:46 pm IST

தொடக்க வீரராக களமிறங்கி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜிம்பாப்வே வீரர் பென்னட் சென்னை ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளார்.

சென்னை ரசிகர்கள் மட்டுமல்லாமல் கிரிக்கெட் உலகிலேயே அவருக்கு சிறப்பான பெயரைக் கொடுத்துள்ளது.

ஜிம்பாப்வே அணி டாஸ் வென்று பந்துவீசியது. இந்திய அணி 256/4 ரன்கள் குவிக்க, ஜிம்பாப்வே அணி 184/6 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இந்தப் போட்டியில் ஜிம்பாப்வே அணியின் தொடக்க வீரர் பிரையன் பென்னட் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து 97 ரன்கள் எடுத்தார்.

பென்னட் மொத்தமாக 6 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகள் எடுத்தார். இவரால்தான் இந்திய அணியின் ரன் ரேட் குறைந்தது.

இந்தியாவின் நெட் ரன் ரேட் பாதிப்பு!

இவரை விரைவிலேயே ஆட்டமிழக்க செய்திருந்தால் இந்திய அணி அதிக ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருக்க வாய்ப்பிருந்திருக்கும் என்பதை இந்திய அணியினர் மறந்துவிட்டனர்.

மேற்கிந்தியத் தீவுகள் அணி 2 (+1.791) புள்ளிகளும் இந்திய அணி 2 (-0.100) புள்ளிகளும் பெற்றுள்ளன.

ஒருவேளை, இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் அணி மோதும் போட்டி மழையினால் ரத்து செய்யப்பட்டால் அது இந்தியாவுக்கு பாதகமாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவும் மேற்கிந்தியத் தீவுகள் அணியும் கொல்கத்தாவில் வரும் மார்ச். 1ஆம் தேதி விளையாடுகிறது.

Summary

Zimbabwean player Brian Bennett impressed despite defeat..! India's net run rate is a problem!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.