மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

அர்ஷ்தீப் சிங் செய்த தவறுக்காக நியூசிலாந்து வீரரிடம் மன்னிப்பு கேட்ட இந்திய கேப்டன்!

இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் நியூசிலாந்து வீரரிடம் மன்னிப்பு கேட்டது குறித்து...

News image

நியூசிலாந்து வீரரிடம் மன்னிப்பு கேட்ட இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ். - படம்: ஏபி

Updated On :17 மார்ச் 2026, 1:32 pm

அர்ஷ்தீப் சிங் செய்த தவறுக்காக இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், நியூசிலாந்து வீரர் டேரில் மிட்செல் இடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் நியூசிலாந்து வீரர் டேரில் மிட்செலை இந்திய வீரர் அர்ஷ்தீப் சிங் பந்தினால் அடித்தது சர்ச்சையானது.

இந்திய அணி நியூசிலாந்தை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் அர்ஷ்தீப் சிங் வீசிய பந்தில் டேரில் மிட்செல் விளையாடிய பந்து மீண்டும் அவரிடமே சென்றது. அந்தப் பந்தைப் பிடித்த அர்ஷ்தீப் சிங், பேட்டர் டேரில் மிட்செல் மீது எறிவார்.

இந்த சம்பவம் மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது. அர்ஷ்தீப் சிங்கிற்கு போட்டிக்கான ஊதியத்தில் இருந்து 15 சதவிகிதத்தை அபராதமாகவும் ஒரு தகுதி இழப்புப் புள்ளியையும் ஐசிசி விதித்தது.

இந்தச் சம்பவத்தின் போது இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் டேரில் மிட்செல் அருகில் சென்று விளக்கம் அளிப்பார். தற்போது இது குறித்து பிடிஐக்கு அளித்த பேட்டியில் பேசியிருப்பதாவது:

சில நேரங்களில் போட்டியின் உக்கிரத்தில் இப்படியான சம்பவங்கள் நிகழ்ந்துவிடும். அப்போது என்ன நடந்தது என்பதை நம்மால் முழுவதுமாகப் புரிந்துக்கொள்ள முடியாது. ஆனால், அதன்பிறகு நான் அர்ஷ்தீப் சிங்கிடம் இப்படி நடந்திருக்கக் கூடாது என்று பேசினேன்.

அதன்பிறகு, டேரில் மிட்செல் இடம் அர்ஷ்தீப் சிங் சென்று பேசினார். அதன்பிறகு அது இலகுவான ஒன்றாக மாறிவிட்டது. அதை அவர் மிகவும் தன்னம்பிக்கையுடன் எடுத்துக்கொண்டார்.

களத்தில் தலைவனாக நான் ஒரு எடுத்துக்காட்டாக இருக்க விரும்புகிறேன். அதனால்தான், நானே மிட்செல் இடம் சென்று பேசினேன். அது மிகவும் முக்கியம் என நான் நினைக்கிறேன். அர்ஷ்தீப் வேண்டுமென்றே செய்திருந்தால் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.