மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக அகமதாபாதில் நடைபெற்ற சூப்பர் 8 ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரில் அகமதாபாதில் இன்று (பிப்ரவரி 26) நடைபெற்ற சூப்பர் 8 ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, மேற்கிந்தியத் தீவுகள் முதலில் விளையாடியது.
ரோமாரியோ ஷெப்பர்டு, ஜேசன் ஹோல்டர் அதிரடி!
முதலில் விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் எடுத்தது.
அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களான பிரண்டன் கிங் 21 ரன்களிலும், கேப்டன் சாய் ஹோப் 16 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன் பின், ஷிம்ரன் ஹெட்மேயர் 2 ரன்கள், ரோவ்மன் பௌவல் 9 ரன்கள், ராஸ்டன் சேஸ் 2 ரன்கள், ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்டு 12 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர். இதனையடுத்து, ரோமாரியோ ஷெப்பர்டு மற்றும் ஜேசன் ஹோல்டர் அணியை சரிவிலிருந்து மீட்டனர்.
அதிரடியாக விளையாடிய ரோமாரியோ ஷெப்பர்டு அரைசதம் விளாசி அசத்தினார். அவர் 37 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். ஜேசன் ஹோல்டர் 31 பந்துகளில் 49 ரன்கள் எடுத்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும்.
தென்னாப்பிரிக்கா தரப்பில் லுங்கி இங்கிடி 3 விக்கெட்டுகளையும், ககிசோ ரபாடா மற்றும் கார்பின் பாஷ் தலா இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
மார்க்ரம், டி காக், ரிக்கல்டான் அதிரடி! அபார வெற்றி!
177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி, 16.1 ஓவர்கள் முடிவில் இலக்கை எட்டி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம், தென்னாப்பிரிக்க அணி 4 புள்ளிகளுடன் கிட்டத்தட்ட அரையிறுதி வாய்ப்பை நெருங்கிவிட்டது.
தென்னாப்பிரிக்க அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய அய்டன் மார்க்ரம் மற்றும் குயிண்டன் டி காக் அணிக்கு அதிரடியான தொடக்கத்தைத் தந்தனர். தென்னாப்பிரிக்க அணி முதல் விக்கெட்டுக்கு 95 ரன்கள் சேர்த்தது. அதிரடியாக விளையாடிய டி காக் 24 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும்.
அதன் பின், கேப்டன் மார்க்ரமுடன் ரியான் ரிக்கல்டான் ஜோடி சேர்ந்தார். இந்த இணை அதிரடியைத் தொடர்ந்தது. மேற்கிந்தியத் தீவுகள் அணியின் பந்துவீச்சாளர்கள் விக்கெட் வீழ்த்த முடியாமல் திணறினர். அதிரடியாக விளையாடிய மார்க்ரம் அரைசதம் விளாசி அசத்தினார். அவர் 46 பந்துகளில் 82 ரன்களும் (7 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள்), ரியான் ரிக்கல்டான் 28 பந்துகளில் 45 ரன்களும் (4 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள்) எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தனர்.
அதிரடியாக விளையாடி அரைசதம் விளாசிய கேப்டன் அய்டன் மார்க்ரமுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக தென்னாப்பிரிக்க அணி அபார வெற்றி பெற்றதன் மூலம், இந்திய அணிக்கு அரையிறுதி வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
South Africa won the Super 8 match against West Indies in Ahmedabad by a huge margin of 9 wickets.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மூவர் அரைசதம் விளாசல்; பஞ்சாப் கிங்ஸுக்கு 3-வது வெற்றி!
விராட் கோலி, படிக்கல் அதிரடி அரைசதம்! ஐபிஎல் தொடரை வெற்றியுடன் தொடங்கியது ஆர்சிபி!

இந்தியாவுக்கு 196 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மே.இ.தீவுகள்; அரையிறுதியில் யார்?

இந்திய அணிக்கு மோசமான தோல்வி; அபார வெற்றியைப் பதிவு செய்த தென்னாப்பிரிக்கா!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



