ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

இலங்கை பேட்டர்கள் சொதப்பல்; இங்கிலாந்து அபார வெற்றி!

டி20 உலகக் கோப்பைத் தொடரில் இலங்கைக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி 51 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

News image
Updated On :22 பிப்ரவரி 2026, 1:05 pm

இணையதளச் செய்திப் பிரிவு

டி20 உலகக் கோப்பைத் தொடரில் இலங்கைக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி 51 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரில் பல்லேகலே திடலில் நடைபெற்ற இன்றையப் போட்டியில் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாடின.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் தாசுன் ஷானகா பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இங்கிலாந்து முதலில் விளையடியது.

பில் சால்ட் அரைசதம்; பந்துவீச்சில் அசத்திய இலங்கை!

முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்கள் எடுத்தது.

இங்கிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர் பில் சால்ட்டினைத் தவிர வேறு யாரும் சரியாக விளையாடவில்லை. நிதானமாக விளையாடி அவ்வப்போது பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்கள் விளாசிய பில் சால்ட் அரைசதம் கடந்து அசத்தினார். அவர் 40 பந்துகளில் 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும்.

ஜோஸ் பட்லர் 7 ரன்கள், ஜேக்கோப் பெத்தேல் 3 ரன்கள், டாம் பாண்டன் 6 ரன்கள், ஹாரி ப்ரூக் 14 ரன்கள், சாம் கரண் 11 ரன்கள், வில் ஜாக்ஸ் 21 ரன்கள், ஜேமி ஓவர்டான் 10* ரன்கள் எடுத்தனர்.

இலங்கை தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய துனித் வெல்லாலகே மற்றும் தில்ஷன் மதுஷங்கா தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினர். மஹீஷ் தீக்‌ஷனா இரண்டு விக்கெட்டுகளையும், துஷ்மந்தா சமீரா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

இலங்கை பேட்டர்கள் சொதப்பல்; இங்கிலாந்து அபார வெற்றி!

147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணி, இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 16.4 ஓவர்களில் 95 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இதன் மூலம் இங்கிலாந்து அணி 51 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இலங்கை அணியில் அதிகபட்சமாக கேப்டன் தாசுன் ஷானகா 24 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தார். அதில் ஒரு பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். பதும் நிசங்கா 9 ரன்கள், கமில் மிஷாரா 6 ரன்கள், குசல் மெண்டிஸ் 4 ரன்கள், பவன் ரத்நாயகே 0 ரன், துனித் வெல்லாலகே 10 ரன்கள், கமிந்து மெண்டிஸ் 13 ரன்கள் எடுத்து அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து பெவிலியன் திரும்பினர்.

YouTube video thumbnail

இங்கிலாந்து தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய வில் ஜாக்ஸ் 3 விக்கெட்டுகளையும், ஜோஃப்ரா ஆர்ச்சர், லியாம் டாஸன் மற்றும் அடில் ரஷீத் தலா இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். ஜேமி ஓவர்டான் ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினார்.

பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் அபாரமாக செயல்பட்ட வில் ஜாக்ஸுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.