/

2028 டி20 உலகக் கோப்பைக்குத் தேர்வான 12 அணிகள்!

2028 ஐசிசி டி20 உலகக் கோப்பைக்குத் தேர்வான அணிகள் குறித்து...

News image
2028 டி20 உலகக் கோப்பைக்குத் தேர்வான அணிகள்.- படம்: ஐசிசி
Updated On :20 பிப்ரவரி 2026, 7:23 am

இணையதளச் செய்திப் பிரிவு

ஐசிசி டி20 உலகக் கோப்பை 2028-க்கு தேர்வான 12 அணிகளின் விவரங்களை ஐசிசி வெளியிட்டுள்ளது.

டி20 உலகக் கோப்பை 2026-ல் சூப்பர் 8 சுற்றுக்குத் தேர்வான அணிகள் அடுத்த உலகக் கோப்பைக்குத் தேர்வாகியுள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது.

2028 டி20 உலகக் கோப்பைப் போட்டிகள் நியூசிலாந்து, ஆஸ்திரேலியாவில் நடைபெற இருப்பதால் இந்த இரு அணிகளும் நேரடியாகத் தகுதி பெறுகின்றன.

இவற்றுடன் அயர்லாந்து, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் ஐசிசி தரவரிசையின்படி 3 இடங்களைப் பிடித்தன. மீதமிருக்கும் 8 இடங்களுக்கு 20 அணிகள் போட்டியிட்டு தேர்வாகுமென ஐசிசி தெரிவித்துள்ளது.

2028 உலகக் கோப்பைக்குத் தேர்வாகியுள்ள 12 அணிகள்

ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, வங்கதேசம், இங்கிலாந்து, இந்தியா, அயர்லாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள், ஜிம்பாப்வே.

summary

Super Eights teams lock in ICC Men’s T20 World Cup 2028 spots as qualification details announced.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.