டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

டி20 உலகக் கோப்பையுடன் ஓய்வு பெறும் மேக்ஸ்வெல்?

ஆஸ்திரேலியாவின் நட்சத்திர வீரர் மேக்ஸ்வெல் ஓய்வு குறித்து...

News image
க்ளென் மேக்ஸ்வெல். - படம்: ஏபி
Updated On :18 பிப்ரவரி 2026, 10:48 am

இணையதளச் செய்திப் பிரிவு

ஆஸ்திரேலியாவின் நட்சத்திர வீரர் க்ளென் மேக்ஸ்வெல் இந்த டி20 உலகக் கோப்பையுடன் ஓய்வு பெறுவார் என முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

அநேகமாக வெள்ளிக்கிழமைதான் (பிப்.20) மேக்ஸ்வெல்லின் கடைசி சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

ஆஸ்திரேலிய அணி டி20 உலகக் கோப்பை 2026-ல் சூப்பர் 8 சுற்றுக்குத் தேர்வாகாமல் லீக் சுற்றுடனே வெளியேறியது. மூன்று போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வென்ற ஆஸி. அணி தனது கடைசி போட்டியில் ஓமனுடன் விளையாடுகிறது.

க்ளென் மேக்ஸ்வெல் (37 வயது) 129 சர்வதேச டி20 போட்டிகளில் 2,897 ரன்கள் எடுத்துள்ளார். அதிகபட்சமாக 145* ரன்கள் எடுத்திருக்கிறார்.

8 மாதங்களுக்கு முன்பாக ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற மேக்வெல் இந்த உலகக் கோப்பையுடன் டி20 போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறவிருக்கிறார்.

முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்கும் இந்தக் கருத்தையே வெளிப்படுத்தியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.