டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

டி20 உலகக் கோப்பையின் 3 போட்டிகளிலும் டக் அவுட்டான அபிஷேக் சர்மா!

இந்திய அணியின் தொடக்க வீரர் அபிஷேக் சர்மாவின் மோசமான ஃபார்ம் குறித்து...

News image
அபிஷேக் சர்மா. - படம்: ஏபி
Updated On :18 பிப்ரவரி 2026, 2:08 pm

இணையதளச் செய்திப் பிரிவு

டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியின் தொடக்க வீரர் அபிஷேக் சர்மாவின் மிக மோசமான ஃபார்ம் தொடர்கிறது.

அபிஷேக் சர்மா தான் விளையாடிய மூன்று போட்டிகளில் ஒரு ரன் கூட எடுக்காமல் டக் அவுட் ஆகியுள்ளார்.

டி20 உலகக் கோப்பையின் 36-ஆவது போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

இந்தப் போட்டியில் நெதர்லாந்தின் சுழல் பந்துவீச்சாளர் ஆர்யன் டட் வீசிய மூன்றாவது பந்தில் அபிஷேக் சர்மா போல்ட் ஆனார்.

இந்த உலகக் கோப்பையில் முதல்முறையாக விளையாடிய அபிஷேக் சர்மா தனது மூன்று போட்டிகளிலுமே டக் அவுட்டாகி இருப்பது அவருக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

மற்றுமொரு தொடக்க வீரரான சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு தரலாமா என பிசிசிஐ முடிவெடுக்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

டி20 உலகக் கோப்பை 2026-ல் அபிஷேக் சர்மா

முதல் போட்டியில் 0 (1 பந்து, அமெரிக்காவுக்கு எதிராக)

2ஆவது போட்டியில் 0 (4 பந்துகள், பாகிஸ்தானுக்கு எதிராக)

3ஆவது போட்டியில் 0 (3 பந்துகள், நெதர்லாந்துக்கு எதிராக)

அதிரடி வீரர் என்றழைக்கப்படும் அபிஷேக் சர்மா ஒரு ரன் கூட எடுக்காமல் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்து சூப்பர் 8 சுற்றிலும் இவருக்கு வாய்ப்பு வழங்கப்படுமா அல்லது சஞ்சு சாம்சன் விளையாடுவாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.