/

ஐசிசி தரவரிசையில் முதலிடம் பிடித்த பாகிஸ்தான் வீராங்கனை!

ஐசிசி டி20 தரவரிசையில் முதலிடம் பிடித்த பாகிஸ்தான் வீராங்கனை குறித்து...

News image
சாதியா இக்பால் - படம்: ஐசிசி
Updated On :17 பிப்ரவரி 2026, 2:13 pm

இணையதளச் செய்திப் பிரிவு

பாகிஸ்தான் மகளிரணியின் வீராங்கனை சாதியா இக்பால் ஐசிசி டி20 தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளார்.

ஆஸ்திரேலியா வீராங்கனை அன்னாபெல் சதர்லேண்ட், இந்திய வீராங்கனை தீப்தி சர்மாவை முந்தி முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

பாகிஸ்தான் வீராங்கனை சாதியா இக்பால் (30 வயது) இடது கை சுழல் பந்துவீச்சாளராக இருக்கிறார்.

தென்னாப்பிரிக்காவுடனான டி20 தொடரில் அசத்திய சாதியா இக்பால் 5 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். இதனால், 2 இடங்கள் முன்னேறி முதல் இடத்துக்குச் சென்றுள்ளார்.

கடைசி போட்டியில் 3 விக்கெட்டுகள் எடுத்து வெற்றிக்கு வித்திட்டார். இருப்பினும் டி20 தொடரை பாகிஸ்தான் 1- 2 என இழந்தது.

கடந்த 2024-ல் முதலிடம் பிடித்த இவர், சதர்லேண்ட் 2025-ல் முதலிடத்துக்கு வந்த பிறகு தரவரிசையில் கீழிறங்கினார்.

ஐசிசி மகளிரணி டி20 தரவரிசைப் பட்டியல்

1. சாதியா இக்பால் - 743 புள்ளிகள் (பாகிஸ்தான்)

2. தீப்தி சர்மா - 729 புள்ளிகள் (இந்தியா)

3. சோஃபி எக்லெஸ்டோன் - 727 புள்ளிகள் (இங்கிலாந்து)

4. அன்னாபெல் சதர்லேண்ட் - 721 புள்ளிகள் (ஆஸ்திரேலியா)

5. ரேணுகா சிங் தாக்குர் - 719 புள்ளிகள் (இந்தியா)

இந்தத் தரவரிசையில் டாப் 5-ல் இரண்டு இந்திய வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளது கவனிக்கத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.