டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் அதிக ரன்கள் குவித்து ஸ்காட்லாந்து சாதனை!

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் அதிக ரன்கள் குவித்து ஸ்காட்லாந்து அணி சாதனை படைத்துள்ளது.

News image
- படம் | AP
Updated On :9 பிப்ரவரி 2026, 1:18 pm

இணையதளச் செய்திப் பிரிவு

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் அதிக ரன்கள் குவித்து ஸ்காட்லாந்து அணி சாதனை படைத்துள்ளது.

ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரில் கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் திடலில் இன்று (பிப்ரவரி 9) நடைபெற்ற போட்டியில் ஸ்காட்லாந்து மற்றும் இத்தாலி அணிகள் விளையாடின.

இந்தப் போட்டியில் ஸ்காட்லாந்து அணி இத்தாலியை 73 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. முதலில் விளையாடிய ஸ்காட்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 207 ரன்கள் எடுத்தது. 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய இத்தாலி, 134 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது.

பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் அபாரமாக செயல்பட்ட மைக்கேல் லீஸ்க் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

ஸ்காட்லாந்து அணி சாதனை!

இத்தாலிக்கு எதிரான இன்றையப் போட்டியில் 207 ரன்கள் எடுத்ததன் மூலம், டி20 உலகக் கோப்பை வரலாற்றில் 200 ரன்களைக் கடந்த முதல் அசோசியேட் நாடு என்ற சாதனையை ஸ்காட்லாந்து படைத்துள்ளது.

இதற்கு முன்பாக, கடந்த 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடரில் கனடாவுக்கு எதிரானப் போட்டியில் அமெரிக்கா 197 ரன்கள் எடுத்திருந்ததே இதுவரையிலான அதிகபட்ச ஸ்கோராக இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.