/

ஹாட்ரிக்கை தவறவிட்ட முஜீப்..! ஆப்கன் ஆதிக்கத்தை நியூசிலாந்து முறியடிக்குமா?

ஆப்கானிஸ்தான் அணியின் சுழல் பந்துவீச்சாளர் முஜீப் உர் ரஹ்மான் பந்துவீச்சு குறித்து...

News image
விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் முஜீப். - படம்: ஏபி
Updated On :8 பிப்ரவரி 2026, 8:01 am

இணையதளச் செய்திப் பிரிவு

ஆப்கானிஸ்தான் அணியின் சுழல் பந்துவீச்சாளர் முஜீப் உர் ரஹ்மான் சிறப்பாக பந்துவீசி ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை எடுத்தார்.

ஃபின் ஆலன், ரச்சின் ரவீந்திரா விக்கெட்டுகளை அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்தினார்.

சென்னையில் நடைபெறும் டி20 உலகக் கோப்பையில் டாஸ் வென்ற ஆப்கன் பேட்டிங் செய்தது.

முதலில் பேட்டிங் செய்த ஆப்கன் அணி 20 ஓவர்கள் முடிவில் 182/6 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிவரும் நியூசிலாந்து அணி பவர்பிளே முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 52 ரன்கள் எடுத்துள்ளது.

முஜீப் உர் ரஹ்மான் போட்டியின் இரண்டாவது ஓவரில் 3, 4-ஆவது பந்தில் 2 விக்கெட்டுகளை எடுத்தார். ஆப்கன் அணியும் பவர்பிளேவில் 2 விக்கெட்டுகளை இழந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

176 ரன்களுக்கு அதிகமாக அடித்து இதுவரை ஆப்கன் தோல்வியே சந்திக்காத நிலையில், அந்த ஆதிக்கத்தை நியூசிலாந்து முறியடிக்குமா என்று எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

summary

Afghanistan's spinner Mujeeb Ur Rahman bowled brilliantly, taking two wickets in a single over.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.